×
 

ஸ்ரீநகரில் கால் வைத்த அமித் ஷா... ஜம்மு - காஷ்மீர் முதல்வருடன் தீவிர ஆலோசனை... அடுத்து நடக்கப்போவது என்ன? 

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 28 பேரின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 28 பேர் பலியாகினர். 

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கரிய தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த தாக்குதலில் 28 பேர் தற்போது வரை பலியாக இருக்கிறார்கள். பலர் படுகாயம்டைந்து சிகிச்சை பெற்று வரக்கூடிய சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இதையும் படிங்க: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா முதல் இலங்கை வரை... உலக நாடுகள் கடும் கண்டனம்!

தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார். இதனையடுத்து ஸ்ரீநகரில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் உயர்மட்ட சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தாக்குதல் நடந்தது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். "சமீப ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட எந்த தாக்குதலையும் விட இந்த தாக்குதல் மிகப்பெரியது. நான் நம்பமுடியாத அளவிற்கு அதிர்ச்சியடைந்துள்ளேன். எங்கள் பார்வையாளர்கள் மீதான இந்த தாக்குதல் ஒரு அருவருப்பானது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள் மற்றும் அவமதிப்புக்கு உரியவர்கள். கண்டன வார்த்தைகள் போதாது" என கடுமையாக சாடியுள்ளார். 

இதையும் படிங்க: “எங்கள விட்டுடுங்க... நாங்க இதை பண்ணல”... ஆனா இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த பாகிஸ்தான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share