×
 

இந்தியாவுக்கு மோடி... தமிழகத்துக்கு எடப்பாடி... அதிமுகவை துள்ளாட்டம் போடவைத்த அமித் ஷா!

ஒரு வழியாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாஜக - அதிமுக இடையே நீடித்து வந்த போஸ்டர் யுத்தத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் கடந்த வாரம் முதலே பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக வர உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வந்தது. கடந்த மாத இறுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டத்தொடரைக்கூட உதறித்தள்ளிவிட்டு, டெல்லி சென்றார். அங்கு விதவிதமான கார்களை மாற்றிக்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்றும், ஓபிஎஸ் , டிடிவி தினகரன், விகே சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க மாட்டேன் என்றும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுக்கு கன்டிஷன் போட்டதாக கூறப்பட்டது. அதிமுகவுடனான கூட்டணிக்காக அண்ணாமலையை மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்தது. இதில் வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் என சீனியர்கள் இருக்க, அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக டெல்லி தலைமை டிக் அடித்துள்ளது. இதற்கு காரணம் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு தாவியவர் என்பது மட்டுமல்ல எம்.ஜிஆர். ஜெயலலிதா மீது அளவுகடந்த மரியாதை மற்றும் அன்பு கொண்டவர் என்பது தான் எனக்கூறப்படுகிறது. 

இன்றைய செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போன போது கூட நயினார் நாகேந்திரனை தலைவராக அறிவித்ததால் தான் கூட்டணிக்கு ஒப்புக்கொள்வேன் என அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கன்டிஷன் போட்டதாகவும், அதனால் தான் நாளை வெளியாக வேண்டிய அறிவிப்பைக் கூட பாஜக தலைமை இன்று மாலையே அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தமிழகத்தை, தமிழ்மொழியை கௌரவமாகக் கருதுகிறோம்... அடித்துச் சொல்லும் அமித் ஷா..!

தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவினரின் மிக மிக முக்கியமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறார். அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் வர உள்ள சட்டமன்ற தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்ளும் என அடித்துக்கூறியுள்ளார். பாஜக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் விகே சசிகலாவையும் அதிமுகவில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது. 

ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக இருந்து வந்த இந்த விவகாரத்திற்கும் அமித் ஷா இன்றைய செய்தியாளர் சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக - பாஜக கூட்டணி என்பது இயல்பானது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது!”
 என அடித்துக்கூறியுள்ளார். அமித் ஷாவின் இந்த அறிவிப்புகள் அதிமுக கட்சியின் ரத்தத்தின் ரத்தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: அமித் ஷா திட்டத்தில் பரபர மாற்றங்கள்… தவிக்கவிட்ட தமிழக கட்சிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share