இரவு முழுவதும் குடித்த கல்லூரி மாணவி... அதிகாலையில் நடந்த சோகம்!!
இரவு முழுவதும் மது குடித்து போதையில் இருந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
இரவு முழுவதும் மது குடித்து போதையில் இருந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சொந்த ஊரை விட்டு வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் டீனேஜ் வயதினர் மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. துரதிஷ்டவசமாக பெண்களும் மது போதைக்கு அடிமையாகி வருதும் அதிகரித்துள்ளது.
தஞ்சையை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணி ஒருவர் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகே ஏகாட்டூரில் இருந்தும் தனியார் ஹாஸ்டலில் தங்கி படித்துள்ளார். அண்மையில் தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பிய மாணவி தனது தோழியின் அறையில் தங்கியதாக தெரிகிறது.
இரவில் பார்ட்டி கொண்டாட நினைத்த மாணவிகள் அதுக்கான ஏற்பாட்டையும் செய்துள்ளனர். இரவு முழுவதும் மது(ஓட்கா) வை வாங்கி குடித்துள்ளனர். பின்னர், அதிகாலையில் வாந்தி எடுத்த மாணவி தனது சக தோழிகளிடம் தனக்கு மயக்கம் வருவதாகவும், பார்வை மங்களாகி வருவதாகவும் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அந்த மாணவி மயங்கி விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: தலைக்கேறிய போதை.. விடிய விடிய ஓட்கா குடித்த கல்லூரி மாணவி.. அதீத மதுபோதையால் இறந்த போன சோகம்..
இதனால் அதிர்ச்சியான தோழிகள் ஆண் நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்த அந்த நண்பர் மாணவியை தூக்கி கொண்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் சக தோழிகள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் அந்த மாணவியின் சகோதரி தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த மாணவியுடன் இருந்த சக தோழிகளை அழைத்த போலீசார், இரவில் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். அப்போது தான் மாணவி அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரிய வந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே மாணவியின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்ற போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இரவு முழுவதும் மது குறித்து மாணவி உயிரிழந்த சம்பவம் கேட்போரை கதிகலங்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: பெற்ற மகனுக்கே எமனாக மாறிய தாய்...ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!