×
 

போர்க்களத்தில் நிற்கும் தளபதி… சீமானை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!

நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். தைரியம் என்பது பயம் இல்லை என்பது அல்ல.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் உள்ள தமிழ் பேராயகம் சார்பில், மாநில அளவிலான மாபெரும் பேச்சு போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அண்ணாமலை பேசும்போது, ''எனக்கும் சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். தைரியம் என்பது பயம் இல்லை என்பது அல்ல; ஓரிடத்தில் நிற்கும் போது, நம்முடைய பயத்தை மறைத்து நிற்பது. எனக்கும் சீமானுக்கும் வித்தியாசமில்லை. 

ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதைவிட, ஒரு போர்க்களத்தில் நிற்கும் தளபதியாகத்தான் நான் என்றும் சீமான் அண்ணனை பார்த்துக் கொண்டிருக்கிறேன். காரணம் அவரது கொள்கை. அந்தக் கொள்கையில் அவர் எடுத்திருக்கும் உறுதிப்பூண்ட நிலைப்பாடு. அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக நிற்கும் அந்த மாண்பு. அண்ணன் சீமான் அவர்களை ஒரு தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நின்று கொண்டிருக்கிறார்.  எனக்கும் அண்ணன் சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். தைரியம் என்பது பயம் இல்லை என்பது அல்ல.

இதையும் படிங்க: பிரதமர் வரும்போது ஊட்டிக்கு செல்வதா.? மன்னிப்பு கேளுங்க.. முதல்வர் ஸ்டாலினை வசைபாடும் அண்ணாமலை!

எப்போதும் அண்ணன் சீமானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துக் கோண்டிருப்பதன் காரணம், இன்றைக்கு அரசியலில் நேர்மையும், நெஞ்சுறுதியும் குறைந்து விட்டது. அது இருக்கக்கூடிய அண்ணன் சீமானுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமர் விழாவைப் புறக்கணிப்பதா.? மாற்றத்துக்கான நேரம் தொடங்கிவிட்டது.. திமுகவை அலறவிடும் அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share