சாம்பல் புதன்..! கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி..!
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக் காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் இன்று தொடங்கியது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாகவும், அவர் 3-ஆவது நாளில் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக தான் சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. சாம்பல் புதனில் இருந்து புனிதவெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் அசைவ உணவைத் தவிர்ப்பதுடன், விரதம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களில் ஈடுபடுவர்.தேவாலயங்களில் பழைய குருத்தோலைகள் எரிக்கப்பட்டு, அந்த சாம்பலை புனிதப்படுத்தி நெற்றியில் பூசிக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாடகமாடுவது பாஜக-வா..? திமுக-வா..? அதிகாலையில் பரபரக்க வைத்த விஜயின் கடிதம்..!
இந்த நிலையில் இன்று சாம்பல் புதன் கடைப்பிடிக்கப்படுகிறது. சாம்பல் புதனையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பழமைவாய்ந்த இருதய ஆண்டவர் தூய பசிலிக்காவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது.
தவக்காலம் இன்று தொடங்கி 40 நாள்களுக்கு கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். தவக்காலத்தின் இறுதி வாரம் சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இதே போல் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, புனித அந்தோணியார், அரியாங்குப்பம் மாதா கோயில் என பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சாம்பல் புதன் நாளில் தொடங்கும் தவக்காலம், ஏப்ரல் 13 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு, 18 ஆம் தேதி புனித வெள்ளி, 20 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் நிறைவுப் பெறுகிறது.மேலும், அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் திருச்சிலுவை வழிபாடு நடைபெறும். மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
இதையும் படிங்க: எல்லா பழியும் பாஜக மீது... மோதலை அண்ணாமலை- ஆளுநர் ரவி இடையே மடைமாற்றும் திமுக..!