×
 

பிரதமர் மோடியுடனான அசாம் முதல்வரின் சந்திப்பு..! தனது பாக்கியம் என நெகிழ்ச்சி..!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்க அழைப்பு விடுத்தார்.

அசாமின் புகழ் பெற்ற இசைக்கலைஞர் பாரத ரத்னா பூபன் ஹசாரிகாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்க விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடியை அசாம் மா நில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, பூபன் ஹசாரிகாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும்  300 KTPA மூங்கிலை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, எத்தனால் உற்பத்தி திறன் கொண்ட, அசாம் பயோ-எத்தனால் ஆலையின் திறப்பு விழாலும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான குவஹாத்தி ரிங் ரோடு திட்டம் மற்றும் தாரங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இரண்டு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் கேட்டுக்கொண்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கா பிரதமர் ஒப்புக்கொண்டதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வரும் 22, 23ம் தேதி.. சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி..!

இதையும் படிங்க: மோடியின் உற்சாக சந்திப்பு தோற்றுப்போனது! வங்கதேச விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த கார்கே…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share