×
 

மார்ச் 20-ல் பிஜேபிக்கு புதிய தலைவர்..! அனுராக் தாக்கூரா? சிவராஜ் சிங் சவுகானா? கடும் போட்டி

வரும் மார்ச் 20 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் பெயர் அறிவிக்கப்பட்டு பதவியும் ஏற்று விடுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் மார்ச் 20 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் பெயர் அறிவிக்கப்பட்டு பதவியும் ஏற்று விடுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தற்போதைய தலைவராக உள்ள ஜெகத் பிரகாஷ் நட்டா பதவிக்காலம் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது அவரே தொடர்ந்து வருகிறார். மத்திய கேபினட் அமைச்சராக உள்ள ஜே.பி.நாட்டா கடந்த ஜனவரி 2020 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக  நட்டா, பொதுச் செயலாளராக பிஎல் சந்தோஷ்,பாராளுமன்ற குழு தலைவராக  நரேந்திர மோடியும் பதவி வகிக்கிறார்கள். 

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் இந்தி அழித்தவரின் பேரன்பேத்திகள் 3 மொழி பள்ளியில் படிக்கின்றனர்..! அர்ஜுன் சம்பத் வெளியிட்ட ஆதாரம்

140 கோடி மக்கள் உள்ள நாட்டின் ஆளும் கட்சி மற்றும் 240 லோக்சபா  எம்பிக்களை கொண்ட கட்சி, 98 ராஜ்யசபா எம்பி களும் 1656 எம்எல்ஏக்களும் சுமார் 14 மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் பாஜக விளங்குகிறது.

அதேபோன்று உலகில் அதிக தொண்டர்கள் உள்ள உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற பெயரும் பாஜகவுக்கு உள்ளது. அத்தகைய சக்தி வாய்ந்த ஒரு பதவிக்கான போட்டி தான் தற்போது நடைபெற்று வருகிறது,

ஜெபி.நட்டா மத்திய அமைச்சராக பதவி ஏற்பதால் அமைச்சரவையில் கவனம் செலுத்த வேண்டிய இருப்பதாலும் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிகிறது.

பாஜக தேசிய தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முன்னாள் மாநில முதல்வர் வாசுந்ரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக்சிங் டாக்கூர் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலரது பெயர்கள் பாஜக தேசிய தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

இதையும் படிங்க: பஸ்ஸில் மாணவர்களை வெளுத்தெடுத்த ரஞ்சனா பாஜகவில் இருந்து விலகல்.! ஹிந்திக்கு கடும் எதிர்ப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share