கனடா பிரதமர் பதவி: தமிழ் பெண் அனிதா ஆனந்த் போட்டி இல்லை என்பதால் ஏமாற்றம்; மற்றொரு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி
கனடாவின் அடுத்த பிரதமர் ஆகும் வாய்ப்பு தற்போது அந்த நாட்டின் அமைச்சராக இருக்கும் தமிழ் வம்சாவளி பெண் அனிதா ஆனந்துக்கு பிரகாசமாக இருந்தது.
பிரதர் பிரதமருக்கான போட்டியில் தான் இல்லை என்று அனிதா ஆனந்த் இப்போது திடீரென அறிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து மற்றொரு இந்திய வம்சாவளி எம்பியான சந்திரா ஆரியா, பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
இந்த ஆண்டு இறுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஒரு சில மாதங்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருக்க முடியும் என்பதால், அனிதா ஆனந்த் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடா பிரதமராகவும் இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ இரு பதவிகளில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தான் வகிக்கும் இரு பொறுப்புகளிலும் தொடர இருப்பதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: இது புதுசு..! செல்போனில் வளர்ந்த காதல்: கணவர், 6 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு, 'பிச்சைக்காரருடன் ஓடிப்போன' பெண்; சமூக வலைத் தளங்களில் 'வைரல்'
இந்த நிலையில் இந்திய தமிழ் வம்சாவளி பெண்ணான கனடா போக்குவரத்து துறை அமைச்சர் அனிதா ஆனந்த் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவர் எந்த மதத்தைச் சேர்ந்த முதல் கனடா அமைச்சர் ஆவார்.
பேராசிரியர் பணிக்கு திரும்ப முடிவு
இந்த நிலையில்தான்கனடா பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்று தற்போது அனிதா ஆனந்த் அறிவித்திருக்கிறார். இது கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மீண்டும் முந்தைய பேராசிரியர் பணிக்கு தான் திரும்ப இருப்பதாகவும் அவர் அறிவித்தே
இருக்கிறார்.
அவர் எம்பி ஆவதற்கு முன்பாக 20 ஆண்டுகளுக்கு மேல் வழக்குரைஞராகவும் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்றாலும் இந்திய வம்சாவளி எம்பியான சந்திரா ஆர்யா, மற்றொரு எம் பி பிராங்க் பீரிஸ் ஆகிய இருவரும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கின்றனர். வெளியுறவு அமைச்சர் மெலனீ ஜோலி, நிதியமைச்சர் டோமினிக் லீப் லாங் ஆகிய இருவரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து ஏற்கனவே விலகி விட்டனர்.
இதையும் படிங்க: அரியணை நோக்கி...கனிமொழி பிறந்த நாளில் வைரலாகும் படங்கள்