சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனல்... இதுதான் பிரச்சினை... உடைத்துப்பேசிய சீமான்..!
அவரது கருத்தை யூடியூப் சேனலில் பதிவிடுகிறார். அதை தெளிவுபடுத்த வேண்டும் எனது கடமை.
நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரான துரைமுருகன் 'சாட்டை' என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதனால்தான் அவரை 'சாட்டை துரைமுருகன்' என்று நாம் தமிழர் கட்சியினர் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த் சில சில தினங்களுக்கு முன் துரைமுருகன் நடத்தி வரும் சாட்டை யூடியூப் சேனாலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், ''திருச்சி துரைமுருகன் நடத்தும் 'சாட்டை" வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்துகள் ஆகும். அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்." என்று சீமான் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: சீட் வேணும் என்றால் விஜய் கட்சிக்கு செல்லுங்கள்... நானே சேர்த்து விடுகிறேன் - சீமானின் பரபரப்பு ஆடியோ...!
இதனை மையப்படுத்தி சாட்டை துரைமுருகனுக்கும், சீமானுக்கும் பிரச்சினை. ஆகையால் சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைய உள்ளார் என யூகங்களை கிளப்பி வந்தனர். இதற்கு விளக்கமளித்த சாட்டை துரைமுருகன், அதற்கு மறுப்புத் தெரிவித்ததோடு, சீமான் அவர்கள் எனது ஆசானைப்போன்றவர். அவர் சில அறிவுரைகளை எனக்கு வழங்கியுள்ளார். தனிப்பட்ட முறையில் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.இப்போது வெளிப்படையாக அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளார். இவ்வளவுதான் விஷயம். எனது தனிப்பட்ட விஷயங்களையும், கட்சி விஷயங்களையும் யூடியூப் சேனல் மூலம் தெரிவித்து வருகிறேன் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய சீமான், ''உண்மையிலேயே சாட்டை என்பது தம்பினுடைய தனிப்பட்ட யூடியூப் சேனல். எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் அவர் பேசுவதெல்லாம் கட்சிக்கு பேசுவதாக சொல்கிறார்கள். அவர் இப்படி பேசுகிறாரே..? உங்களுக்கு தெரியாமலா பேசுவார்? என்று கேட்கிறார்கள். இதோ பக்கத்தில் இருக்கிறார் எனது இன்னொரு தம்பி. அவர் ஒரு கருத்தை பேசுகிறார். அதை கட்சியின் கருத்தாக பார்க்க முடியாது.
சாட்டை என்பது துரைமுருகனின் தனிப்பட்ட யூடியூப் சேனல். அதை நான் தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது. நீங்கள் சொல்லாமலா பேசுகிறார்..? உங்களுக்கு தெரியாமலா பேசுகிறார்..? என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே எனக்கு தெரியாது. அவரது கருத்தை யூடியூப் சேனலில் பதிவிடுகிறார். அதை தெளிவுபடுத்த வேண்டும் எனது கடமை. அதற்காகத்தான் அந்த அறிக்கை. புரிகிறதா?'' என கூறினார் சீமான்.
இதையும் படிங்க: திருமாவை விடுங்க.. என் எதிரியை நான் கருவில் இருக்கும்போதே தீர்மானித்து விட்டேன்- சீமான் திட்டவட்டம்..!