அமெரிக்க அதிகாரிகள் திபெத் பகுதிக்குள் வர கட்டுப்பாடு.. சீனா திடீர் நடவடிக்கை..!
அமெரிக்க அதிகாரிகள் திபெத் பகுதிக்குள் வர சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் பகுதிக்குள் அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வருவதற்கு சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வந்தால் அங்கு மோசமாக நடந்து கொள்கிறாரகர்கள் என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இதன்படி சீன அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி கடந்த 2 வாரங்களுக்கு முன் அறிவித்தது. இதற்குப் பதிலடியாக தற்போது திபெத் பகுதிக்குள் அமெரிக்கா அதிகாரிகள் யாரும் வருவதற்குத் தடைவிதித்து இன்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 145% வரிவிதிப்பில் சிக்கிய சீனா.. கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொக்கரிப்பு..!
அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சர்வதேச ஆய்வாளர்கள் திபெத் பகுதிக்குள் செல்வதற்கு சீன அரசு அனுமதி மறுத்து, விசா எடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில் “திபெத் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்கள். இதில் அமெரிக்க அதிகாரிகள் தலையிடககூடாது. நாங்கள் விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததால் எங்களை அமெரிக்க விமர்சிக்கிறது.
திபெத் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது சர்வதேச சட்டங்களை மீறுவது மட்டுமல்லாமல் அங்குள்ள அமைதியைக் கெடுப்பதாகும். எங்கள் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு திபெத் எப்போதும் திறந்தே இருக்கும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் வியாபாரம் செய்யலாம். ஆனால் எந்த நாடும், தனிநபரும் திபெத் விவகாரத்தில் தலையிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.
கடந்த 1950களில் இருந்தே திபெத் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் திபெத் மக்களை சீனா அடக்கி ஆள்வதாக பலமுறை புகார்கள் வந்தன. இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுக்கிறது.
இதையும் படிங்க: வலுக்கும் வரி யுத்தம்: சீனா மீது மேலும் 50% வரி விதிப்பேன்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!