×
 

அதிமுகவுக்கு தகுதி இருக்கா? - கர்ஜித்த முதலமைச்சர்... கப்சீப் ஆன எடப்பாடி... பேரவையில் காரசார விவாதம்! 

நீட் சிக்கலை சரி செய்ய கூட்டணி மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது உங்களால் முடியுமா? சாத்தியமா? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பி உள்ளார். 

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் மருத்துவத்துறையின் மீதான மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்று வருகின்றது. அதில் அதிமுகவை சேர்ந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவத்ததுறையின் மீதான மானிய கோரிக்கையில் விவாதத்தில் உரையாற்றும் போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவ கல்லூரிகள் குறித்தும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவ கல்லூரிகள் குறித்தும் விவாதம் ஏற்பட்டது. 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில், அதிமுக ஆட்சியில் தான் அதிக மருத்துவ வசதிகள் கொண்டுவரப்பட்டது என்றும், திமுக ஆட்சியில் எத்தனை மருத்துவமனைகள் கொண்டுவரப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் மா.சு.சுப்பிரமணியன் அவர்கள் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் ஒன்றிய அரசிற்கு மருத்துவக் கல்லூரிகள் குறித்த கோரிக்கை வைத்து வருகிறோம். ஒன்றிய அரசு ஏற்கனவே தமிழகத்தில் போதுமான மருத்துவ மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாக கூறி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தர மறுத்துள்ளது எனக்கூறினார். 

இதையும் படிங்க: வக்கில்லாத திமுக அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!

தொடர்ந்து பேசிய அவர், எனினும் ஒவ்வொரு முறை முதலமைச்சர் டெல்லி செல்லும்போது பிரதமரை தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி வருகிறார். விரைவில் அதற்கான ஒப்புதலை பெற்று புதிதாக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ஆறு மருத்துவ கல்லூரிகளை உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.   நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் 11 மருத்துவக் கல்லூரியை ஒன்றிய அரசு அளித்தது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிதற்கு, எதிர்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

 அதனை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தான்  நீட் தேர்வு வந்தது,  நீட் தேர்வு யாருடைய ஆட்சியில் வந்தது என செல்வப்பெருந்தகை உட்பட அனைவரும் தெரியும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவுடன் கூட்டணி இருக்காது என தெரிவித்து, நீங்கள் தற்போது கூட்டணி அமைத்தது ஏன்?,  நாங்கள் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால் நிச்சயம் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்திருப்போம். இதுவரைக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நீங்கள் தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரியை கொண்டு வருவோம் என்ற ஒரு நிர்பந்தத்தோடு கூட்டணி அமைத்திருக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.

அப்போது, மிசா சட்டத்தை கொண்டு வந்த மிசாவில் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர், “நீங்கள் காங்கிரஸுடன் கூட்டணிஅமைத்த 2021ல் அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பதற்கு, முதலமைச்சர் பாஜகவுடன் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றியது நீங்கள்தான் என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்கட்சி தலைவர் அவர்கள் யார் கொண்டு வந்தது யார் கொண்டு வந்தது கொண்டு வந்த காரணத்தினால்தான் இவர் சிக்கல் என்று சொல்லுகிறார். சரி அந்த சிக்கலை சரி செய்வதற்கு உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது. நாங்கள் செய்தது தவறோ, தவறு இல்லையோ நான் அந்த வாதத்திற்கு போகவில்லை. இப்ப இருக்கக்கூடிய நீட் தேர்வை ரத்து செய்தால்தான் நாங்கள் கூட்டணியில் இருப்போம் இல்லை, என்றால் கூட்டணி விட்டு விலகுவோம் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா? 

 அரசு கொண்டு வருவதற்கு எல்லாவித தகுதியும் உண்டு. அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசுக்கு வாய்ப்பு உண்டு, அதை நீங்க வலியுறுத்துவதற்கு தயாரா அதுதான் என்னுடைய கேள்வி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். வாக்குறுதி கொடுத்தது உண்மைதான், அதில் நாங்கள் எந்தவிதமான மறுப்பும் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் எங்களுடைய கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைந்திருந்தால் நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்திருப்போம். இப்பொழுது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே..  இந்த கண்டிஷனை போட்டு அந்த கூட்டணியைத் தொடர்வதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: அமித் ஷா இனி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்.. பாஜக ஆட்சியும் வரும்.. ஒரு முடிவில் இருக்கும் நயினார்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share