×
 

போலீஸ் தேர்வில் 'காப்பி' அடித்தவர் சிக்கினார்: காதுக்குள் சிறிய 'ப்ளூடூத்' சொருகி, 'சினிமா பாணி'யில் நூதன மோசடி..

போலீஸ் தேர்வில் காதுக்குள் சிறிய ப்ளூடூத் சொருகி, நூதன முறையில் காப்பியடித்த இளைஞர் ஒருவர் பிடிபட்டார். சினிமா பாணியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பை போலீஸ் டிரைவர் பணிக்காக எழுத்து தேர்வு நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதிலிருந்து 62,000 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஒஷிவாரா என்ற இடத்தில் உள்ள ராணுவ பள்ளிதேர்வு மையத்தில், வழக்கம்போல் இந்த தேர்வு தொடங்கியது. 

தேர்வை கண்காணித்து வந்த அலுவலர் ஒருவர், அவர்களின் ஒரு மாணவர் மட்டும் தனது காதை தொட்டுக்கொண்டு சந்தேகப்படும்படி இருந்ததை பார்த்து விட்டார். 

அவரை பரிசோதித்த போது சிறிய டியூப் மாத்திரை அளவிலான ப்ளூடூத் எலக்ட்ரானிக் கருவியில் சிம் கார்டு பொருத்தி தனது காதின் உள்பகுதியில் பொருத்தி இருந்தது தெரிய வந்தது. 

இதையும் படிங்க: ‘டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்’: ஐஐடி ரூர்கே மின்அஞ்சலைப் பார்த்து ‘ஷாக்’ ஆகிய கேட் விண்ணப்பதாரர்..

தேர்வுக்கு முந்தைய வழக்கமான பரிசோதனையின் போது இதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் சிறிய அந்த கருவியை காதின் உட்பகுதிக்குள் ஆழமாகஅவர் சொருகி இருந்ததால் டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தும் கூட அது கண்ணுக்கு தெரியவில்லை. 

அந்தக் கருவி மூலம் அவர் வெளியில் இருந்த தனது நண்பர் ஒருவரிடம் கேள்விகளை சொல்லி பதிலைப் பெற்று தேர்வு எழுதி இருக்கிறார். ஒரு கட்டத்தில் உரையாடலில் ஏதோ இடையூறு ஏற்பட்டதும் அவசரமாக எழுந்து பாத்ரூம் சென்று கருவியை சரி செய்ய முயற்சித்ததும் தெரிய வந்தது. 

இப்படிப்பட்ட அந்த மாணவரைஉடனடியாக தேர்வு மைய நிர்வாகிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன. 

அவருடைய பெயர் கிருஷ்ணா மகாதேவராவ் தால்வி ( வயது 25) என்று தெரிந்தது.அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

 வெளியில் இருந்து சரியான விடைகளை எழுதுவதற்கு அவருக்கு உதவி செய்த நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இது போன்று மாணவர்கள் நூதன முறையில் காப்பி அடித்த  காட்சிகள் இடம் பெற்று உள்ளன. அதே பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கல்வி நிதியில் பிளாக்மெயில் செய்றாங்க ..மாநில பொறுப்பில் இருக்க அக்காவுக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share