×
 

சட்டவிரோத குடியேறிகளை பயங்கரவாதிகளுடன் சிறையில் அடைக்கத் திட்டம்… கொலை நடுங்க வைக்கும் டிரம்ப்..!

குவாண்டனாமோ விரிகுடா என்பது கியூபா அரசிடம் இருந்து அமெரிக்கா நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு எடுத்த இடம்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்கொய்தா பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகிறார்கள். டிரம்ப் அவர்களை ஆபத்தான குவாண்டனாமோ ராணுவ சிறையில் அடைக்கத் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகளுக்கான தனது ஆபத்தான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். குவாண்டனாமோ இராணுவ சிறையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுத்து வைக்கும் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். 9/11 தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து கைப்பற்றப்பட்ட அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரமான பயங்கரவாதிகளும் சந்தேக நபர்களும் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கியூபாவின் கிழக்கு முனையில் உள்ள இந்த சிறையில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை அடைத்து வைக்க தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ராஜினாமா மின்னஞ்சல்… 8 மாத ஊதியத்துடன் வெளியேறலாம்… அமெரிக்காவை அலறவிடும் ட்ரம்ப்..!

இதுகுறித்து அவர் கூறுகையில்,''குவாண்டனாமோவில் எங்களிடம் 30,000 படுக்கைகள் உள்ளன. அங்கு அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் மோசமான கிரிமினல் வெளிநாட்டினரை அடைத்து வைக்க முடியும். அவர்களில் சிலர் மிகவும் மோசமானவர்கள். அவர்களைப் பிடிக்க அந்தந்த நாடுகளை நாங்கள் நம்பவில்லை. அவர்களை திருப்பி அனுப்புவதையும் நாங்கள் விரும்பவில்லை. அதேபோல சட்டவிரோத குடியேறிகளையும் அங்கு அடைக்கத் திட்டமிட்டுள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.


 
குவாண்டனாமோ சிறையில் அடைப்பது குறித்த அறிக்கையில் டிரம்ப் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ''இந்த நடவடிக்கையானது அமெரிக்க காவலில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் என்றும், குவாண்டனாமோ 'வெளியேறுவதற்கு கடினமான இடம்' என்றும் டிரம்ப் கூறியுள்ளார். புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டிடென்ஷன் வாட்ச் நெட்வொர்க் திட்ட இயக்குனர் ஸ்டேசி சுஹ் அறிக்கையில், 'குவாண்டனாமோ விரிகுடாவின் தவறான வரலாறு தனக்குத்தானே பேசுகிறது. நிச்சயமாக மக்களின் உடல், மன ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும்' என்று கூறினார்.

கியூபாவின் கிழக்கு முனையில் உள்ள குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளம், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் கைதிகளை அடைக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. அல்கொய்தா, இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். குவாண்டனாமோ விரிகுடா என்பது கியூபா அரசிடம் இருந்து அமெரிக்கா நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு எடுத்த இடம்.

இதையும் படிங்க: வங்கதேசத்திற்கு அமெரிக்கா வழங்கும் உதவி நிறுத்தம்... ட்ரம்ப் எடுத்த அதிரடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share