×
 

சேனாதிபதி என விசுவாசம் காட்டிய அந்த 'ஒருவர்'..! விளாசிய துரை வைகோ..!

மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றமில்லை என துரை வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

துரை வைகோ தனது முதன்மை செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்த நிலையில் இன்று அவரசமாக மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. மல்லை சத்யாவின் செயல்பாடுகள் தான், துரை வைகோ விலக காரணம் என கூறப்படும் நிலையில், தன்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சேனாதிபதி என தனது விசுவாசத்தை சூசகமாக தெரிவித்து இருந்தார் மல்லை சத்யா.

இந்த நிலையில் மல்லை சத்யாவின் பேச்சுக்கு துரை வைகோ பதிலடி கொடுக்கும் வகையில் பேசி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, மதிமுகவுக்காகவும் வைகோவுக்காகவும் உழைத்தவர்கள் ஏராளமானோ இருக்கின்றனர் என தெரிவித்தார். வைகோவின் சேனாதிபதி நான் என இன்று காலை மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்து பேசிய அவர், வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதி இல்லை., ஒவ்வொரு கட்சி தொண்டனும் தளபதி தான் எனக் கூறினார். ஃபேக் ஐடி வைத்து பதிவு போடுவதை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது என்றும் துரை வைகோ சாடினார்.

இதையும் படிங்க: பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ..! விலகலை ஏற்க மறுக்கும் மதிமுக..!

உட்கட்சி பிரச்சனை வெளியில் வந்ததே அவரால் தான் என்றும் தேர்தல் நேரத்தில் கட்சி தலைமைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்வும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பை உதறிய துரை வைகோ..! தந்தை வைகோவுடன் முக்கிய ஆலோசனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share