×
 

எனக்கே ஆட்டமா..? செங்கோட்டையனை வைத்து பாஜக சித்து விளையாட்டு: மோடியை சந்திக்க மறுக்கும் இ.பி.எஸ்

செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக முக்கியத் தலைவர்களை சந்தித்தது பல்வேறு பிரளயங்களை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி விதித்ததாகவும் அதனை அமித் ஷா ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்தே அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. 

ஆனால், அடுத்து செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக முக்கியத் தலைவர்களை சந்தித்தது பல்வேறு பிரளயங்களை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.  ஆனால், திடீர் ட்விஸ்டாக பிரதமர் மோடியை சந்திப்பதை எடப்பாடி பழனிசாமி தவிர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டம்..? கேள்வி எழுப்பிய இபிஎஸ்.. உதயநிதி சொன்ன நீட் விலக்கு ரகசியம் எங்கே..?

பிரதமர் மோடி இலங்கையில் உள்ள அனுராதாபுரத்தில் இருந்து நாளை காலை 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு 11.45 மணிக்கு வருகிறார். அவரை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கிறார். வரவேற்பு முடிந்ததும் 11.50 மணிக்கு மண்டபத்தில் இருந்து பாம்பன் செல்கிறார். அங்கு 12.25 மணிக்கு ரயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் 12.40 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். சிறப்பு பூஜைகளையும் செய்கிறார். அதைத் தொடர்ந்து 1.20 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு 1.30 மணிக்கு தமிழ்நாடு டூரிசம் மைதானத்துக்கு வருகிறார்.

அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 2.55 மணிக்கு மண்டபம் செல்கிறார். 3 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார். மதுரைக்கு 3.50 மணிக்கு விமானநிலையம் வந்தடைகிறார். அங்கு முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை எப்படியாவது மோடியை சந்திக்க வைக்க வேண்டும் என்று பாஜக மேலிட தலைவர்கள் தீவிரம் காட்டினர். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அமித்ஷாவை சந்தித்த உடனேயே தன் கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் பேசியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தம்பித்துரை, சி.வி.சண்முகம் ஆகியோரையும் சந்தித்துப் பேசினர். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணிக்கு அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் கட்சியை உடைக்கும் பணியை பாஜக செய்தது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் ஓ.பி.எஸ், டிடிவி. தினகரன், அண்ணாமலை ஆகியோரை சந்திக்க மோடி நேரம் ஒதுக்கியிருந்தார். இந்தத் தகவலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவந்தது. இதனால் மோடியை வரிசையில் அவர்களுடன் நின்று சந்திக்க விரும்பவில்லை என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, மோடியை சந்திப்பதை தவிர்க்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுவது தமிழக பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆட்சிக்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.. இபிஎஸ் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share