×
 

‘தேர்தல் ஆணையமே சமரசம் செய்து கொண்டது, ‘சிஸ்டத்திலேயே’ தவறு இருக்கிறது’.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது, அதன் செயல்பாட்டு முறையிலேயே தவறு இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது, அதன் செயல்பாட்டு முறையிலேயே தவறு இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு கடந்த 19ம் தேதி சென்றுள்ளார். அங்கு பாஸ்டன் நகரில் நேற்று நடந்த ஒரு நிகழ்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியத் தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டில் சமரசம் செய்து கொண்டது. எளிதாகக் கூற வேண்டுமென்றால், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள வாக்களிக்கும் வயதுள்ளவர்களைவிட அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

இதையும் படிங்க: இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!

தேர்தல் ஆணையம் மாலை 5.30 மணிக்கு ஒரு வாக்கு சதவீதத்தை வெளியிட்டது, அதன்பின் 5.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு இடையே 65 லட்சம் பேர் வாக்களித்ததாக தெரிவித்தது. 2 மணிநேரத்தில் எப்படி 65லட்சம் பேர் வாக்களித்திருக்க முடியும், நடைமுறைக்கு சாத்தியமில்லாததாக இருக்கிறது. ஒரு வாக்காளர் வாக்களித்து முடிக்க சராசரியாக 3 நிமிடங்களாகும். கணித்தப்படி பார்த்தால் அதிகாலை 2 மணிவரை வரிசையில் நின்றிருந்தால்தான் 65 லட்சம் வாக்குகள் செலுத்த முடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பின்னர் எப்படி 2 மணிநேரத்தில் 65 லட்சம் வாக்குகள் பதிவாகும்.

நாங்கள் வீடியோ காட்சியை வெளியிடுங்கள் எனக் கேட்டபோது, அவர்கள் மறுத்ததோடு, சட்டத்திலேயே திருத்தம் கொண்டு வந்துவிட்டார்கள். இப்போது வீடியோ காட்சியை யாரும் கேட்க முடியாதவகையில் சட்டம் மாற்றப்பட்டது.

ஆதலால் தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டில் சமரசம் செய்து கொண்டது தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது, இதைநான் பலமுறை தெரிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி கடந்த 19ம் தேதி அமெரிக்காவுக்கு வந்தார். வர்த்தகம் மற்றும் சமூகம் சார்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். 21,22ம் தேதிகளில் ரோட் ஐலாண்டில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார். ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள், உறுப்பினர்களுடனும், மாணவர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க: 8 நாட்களாக ராகுல் காந்தி பேச அனுமதி மறுப்பு.. சபாநாயகரை கூட்டாகச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share