ஏர்லெட்டை தொடர்ந்து ஜியோவுடனும் ஒப்பந்தம்... ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எலான் மஸ்க்!!
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அம்பானியின் ஜியோவுடன் இணைந்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ், நியூட்ராலிங், எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் தலைவராக உள்ளார். தனது நிறுவனங்களை விரிவுப்படுத்தும் எலான் மஸ்கின் டார்கெட் இந்தியாவாக உள்ளது. அண்மையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்குள் தடம்பதித்துள்ளது. மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூம் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து இந்தியாவில் மற்றொரு துறையிலும் எலானின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நுழைந்துள்ளது.
அதாவது இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்டாலிங்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் ஏர்டெல்லின் சில்லறை விற்பனை கடைகளில் ஸ்டார்லிங்கின் தயாரிப்புகள் விற்பனையாகலாம் என கூறப்படுகிறது. மேலும் ந்தியாவின் இணைய சேவையை மேம்படுத்தவும் ஸ்பேஸ் எக்ஸுடன் ஏர்டெல் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜியோ நிறுவனத்தில் மேலும் ஒரு மைல்கல்.. ஸ்பேஸ் எக்ஸ் உடன் கையெழுத்தானது ஒப்பந்தம்..!
இது ஒரு பக்கம் இருக்க ஏர்டெல்லின் நேரடி போட்டியாளாரான முகேஷ் அம்பானியுடன் எலான் மஸ்க் இணைந்துள்ளார். அதாவது முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்துடன் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங் புராஜெக்ட் ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஜியோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சேவைகளை மேற்கொள்ள ஸ்டாலிங்க் உதவும் என்பதால் ஜியோ நுகர்வோர் மூலம் ஸ்டார்லிங்கை கொண்டு செல்லவும் திட்டமிட்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் தனது சில்லறை விற்பனை மூலம் ஸ்டார்லிங்கை விற்பனை செய்து அதன் வாடிக்கையாளர்களான சேவையை செயல்படுத்தவும் கட்டமைப்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ள எலான் மஸ்க் நேரடியாக இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கி இருப்பது எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதே வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: மாஸ் என்ட்ரி கொடுத்த எலான் மஸ்க்… விரைவில் இந்தியாவில் ஸ்டார் லிங்க்!!