×
 

தங்கக் கடத்தலில் சிக்கிய நடிகைக்கு 17 ஏக்கர் நிலம்.. ஒதுக்கீடு செய்ததா கர்நாடகா அரசு..? சிபிஐ பிடி இறுகுகிறது..!

தங்கக் கடத்தலில் சிக்கிய நடிகைக்கு கர்நாடகா அரசு 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக சமீபத்தில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவுக்கு முந்தைய பாஜக ஆட்சியின்போது கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் எக்கு ஆலை அமைக்க 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக கர்நாடக தொழில் துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (KIADB) அறிவித்திருக்கிறது.

நடிகையும் ஐபிஎஸ் அதிகாரியின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார். இந்த வழக்கு தற்போது அரசியல் ரீதியான திருப்பத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது. 

அதைத் தொடர்ந்து கர்நாடக மாநில நடுத்தர மற்றும் பெரிய தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டீலின் அலுவலகம், துமகுகுரு மாவட்டத்தில் உள்ள சிரா தொழில்துறை பகுதியில் ரன்யாவின் நிறுவனமான 'க்ஸிரோடா இந்தியா'வுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 2021 பிப்ரவரி 22ஆம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 

இதையும் படிங்க: மிரட்டியதாக நடிகை பரபரப்பு வாக்குமூலம்... கிடுக்குப்பிடி விசாரணை..!!

ஏற்கனவே 2023 மே மாதம் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அந்த அறிக்கையில் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிரா தொழில்துறை பகுதியில் எக்கு பொருட்கள் டிஎம்டி பார் தண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் உற்பத்திக்கான ஒரு பிரிவை நிறுவுவதற்கான "மெர்சஸ் க்ஸிரோட இந்தியா பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ரூ.138 கோடி முதலீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருப்பதில் அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறது. இது பின்வரும் உள்கட்டமைப்பு உதவிகள், ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகளுடன் சுமார் 160 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதாகவும் அது கூறியது. 

பாட்டீல் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் நடிகையுடன் இணைக்கப்பட்ட நிறுவனத்திற்காக ஒதுக்கீடு ஜனவரி 2023 செய்யப்பட்டதாக KIADB அறிவித்து இருந்தது‌‌.

KIADB தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் இது பற்றி கூறும் போது பாஜகவை குறிப்பிட்டு முந்தைய அரசாங்கத்தால் ஜனவரி 2, 2023 அன்று நடிகையின் நிறுவனத்திற்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

"துமகுரு மாவட்டத்தில் உள்ள சிரா தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள இந்த நிலம் கடந்த அரசு ஆட்சியில் இருந்து அதே நாளில் நடைபெற்ற 137-வது மாநில அளவிலான ஒற்றைச் சாரள அனுமதி குழு கூட்டத்தின் போது ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது" என்று மகேஷ் கூறினார்.

அந்த செய்தி குறிப்பின்படி நிறுவனம் 138 கோடி ரூபாய் முதலீட்டில் எக்கு டிஎம்டி பார்கள் தண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்கான உற்பத்தி அலகு அமைக்க ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது. இந்த திட்டம் தோராயமாக 120 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

தெம்பே கவுடா சர்வோதய சிவகுமார நிலையத்தில் ரன்யாவிடம் இருந்து 12.56 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பரிந்துரை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவருடைய வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து மேலும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 2.67 கோடி மதிப்புள்ள இந்திய நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அறிவித்திருந்தது. 

ரன்யா மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் ஆவார். டிஜிபி அந்தஸ்து கொண்ட இந்த அதிகாரி தற்போது கர்நாடக மாநில காவல்துறை வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். 

இந்த வழக்கில் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட தொகை 17.29 கோடி ஆகும். இதில் 4.73 கோடி மதிப்புள்ள சொத்துகளும் அடங்கும். இது ஒழுங்கமைக்கப்பட்ட தங்க கடத்தல் வலை அமைப்புக்கு குறிப்பிடத்தக்க அடியாகும்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் பிரபல நடிகை கைது... உடலில் இத்தனை கிலோவா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share