×
 

இனவெறியுடன் விமர்சனம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹர்பஜன் சிங்.. ஜோப்ரா ஆர்ச்சர் கருப்பு டாக்சியா?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை லண்டனில் ஓடும் கருப்பு டாக்சி உடன் ஒப்பிட்டு ஹர்பஜன் சிங் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங், தற்போது ஆம் ஆத்மி கட்சியில் எம்.பி ஆக உள்ளார். ஆனாலும் அவர் இன்னும் பழைய தொழிலான கிரிக்கெட்டை முற்றிலும் கைவிட்டு விடவில்லை. தற்போது நடந்து வரும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நேர்முக வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். ஐபிஎல் 2025 போட்டிகளின் வர்ணனையாளராக இருக்கிறார். நேற்று ஐதராபாத்-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்றது. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிரடியாக பேட்டிங் ஆடி 286 ரன்கள் சேர்த்து சாதனைப் படைத்தனர். 

அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் மற்றும் கிளாசன் ஆகிய நால்வரின் அதிரடியான ஆட்டத்தால் அந்த பந்துகள் நேராக பவுண்டரிக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன. இது ஐபிஎல் தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என கொண்டாடப்படுகிறது.

இந்த போட்டியில் மிகவும் அதிர்ச்சியான விஷயமாக அமைந்தது ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தை ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கியது தான். ராஜஸ்தான் அணியில் இங்கிலாந்து பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer)விளையாடினார்.  ரூ.12.5 கோடிக்கு அவரை ராஜஸ்தான் அணி வாங்கி அணியில் சேர்த்தது.ஆனால், நேற்றைய முதல் போட்டியில் அவர் மிக மோசமான பவுலிங் செய்தார்.  4 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்தார்.  

இதையும் படிங்க: குஷியோ குஷி… இந்திய எம்.பி.க்களின் சம்பளம் 24% உயர்வு: இன்னபிற இத்யாதிகளும் அதிகரிப்பு

18வது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் அவர் வீசியபோது, பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அவருடைய  பந்துகளை அனாயசமாக அடித்து ரன்களை குவித்தனர்.  தொடர்ச்சியாக சில பவுண்டரிகளையும் அடித்தனர்.  அந்த நேரத்து விளையாட்டை ஹர்பஜன்சிங் நேரடியாக வர்ணனை செய்துகொண்டிருந்தார். ஆர்ச்சரைப் பற்றி குறிப்பிட விரும்பிய ஹர்பஜன், லண்டன் நகரில் ஓடும் கருப்பு நிற டாக்சிகளின் மீட்டரைப் போல, ஆர்ச்சரின் ரன் கொடுக்கும் மீட்டரும் அதிகமாக உள்ளது  என பேசினார்.

ஹர்பஜனின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹர்பஜன் சிங், ஜோஃப்ரா ஆர்ச்சரின் நிறத்தை குறித்து பேசியதாக எடுத்துக்கொண்டு ரசிகர்கள் பலர் முகம் சுளித்தனர். ஹர்பஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஐபிஎல் வர்ணனை குழுவில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் வலியுறுத்தினர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, ஹர்பஜன் சிங்கோ இது குறித்து எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

ஹர்பஜன் கிரிக்கெட் விளையாடி காலகட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள், அவரிடம் இனவெறியுடன் மோசமாக நடந்துகொண்டனர் என்ற புகார்கள் எழுந்திருக்கின்றன. அப்போது கிரிக்கெட் ரசிகர்கள் ஹர்பஜனுக்கு ஆதரவாக இருந்தனர்.  இப்போது ஹர்பஜனுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: முடிஞ்சா அணை கட்டுங்க பார்க்கலாம்... ஆவேசமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share