மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 23ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்தது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதேநேரம் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. அது மட்டுமின்றி, கடலோர பகுதிகளிலும் உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது.
சில பகுதிகளில் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு வேலூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: அடுத்து 3 மணி நேரம் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இரவு 10 மணி வரை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வேலூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரை புரட்டிப்போட்ட மழை..! மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!