×
 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் மரணம்; 9 பேரின் நிலை என்ன? 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 41 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 41 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இம்முறை 1100 காளைகளும், 900 மாடுபிடிவீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர். தற்போது 10வது சுற்று பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. காலை 6 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 41 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர் மற்றும் பார்வையாளர்கள் 6 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ஏலேய் மாட்ட விட்றா... களத்தில் வீரரை அடித்த காளையின் ஓனர் - களேபரமான வாடிவாசல்!

இதனிடையே, மாடு மார்பில் குத்தியதில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான நவீன்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். அவனியாபுரத்தில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையும் படிங்க: காளையர்களை பறக்கவிட்ட காளைகள்; அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 12 பேர் காயம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share