×
 

அமெரிக்க மது வகைகளுக்கு 150% வரி விதிக்கும் இந்தியா.. மீண்டும் வரிப் பிரச்சனையை கிளப்பிய ட்ரம்ப் அரசு..!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மது வகைகளுக்கும், வேளாண் பொருட்களுக்கும் அதிகபட்சமாக 150 சதவீதம் வரி விதிக்கிறது இந்திய அரசு என்று வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகமான வரியை விதிப்பதை கண்டித்த அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரித்திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தெரிவித்தார். அதாவது அமெரிக்கப் பொருட்களுக்கு என்ன வரியை இந்தியா விதிக்கிறதோ அதே வரியை இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் முறையை கையாளப்போவதாக தெரிவித்தார்.

ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரித்திட்டத்தை அமல்படுத்தப் போவதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதத்துக்கும் அதிமான வரி விதிக்கிறது. இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 

இதையும் படிங்க: அடித்து நொறுக்கும் மோடி..! இந்தியா-மொரிஷியஸ் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இந்தியா மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா நாடுகள் மீதும் கடுமையான வரிச்சுமையை அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கனடாவில் இருந்து வரும் ஸ்டீல், அலுமினியத்துக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதற்குப் பதிலடியாக அமெரிக்காவுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு அதிகமான வரியை கனடா விதித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மது வகைகளுக்கும், வேளாண் பொருட்களுக்கும் அதிகமான வரிவிதிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலர் கரோலின் லீவிட் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மது வகைகள், வேளாண் பொருட்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது. இது மிகமிக அதிகம். அமெரிக்கா மக்களின் கடின உழைப்பையும், அமெரிக்காவின் சொத்துக்களையும் கனடா உரித்து எடுத்துக்கொண்டது. 

அமெரிக்க மக்கள் மீதும் அங்குள்ள நமது தொழிலாளர்கள் மீதும் கனடா அரசு சுமத்தி வரும் பல்வேறு கட்டண விகிதங்கள் மிகவும் மோசமாக உள்ளது. உண்மையில், கனடாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வரி விகிதத்தையும் காட்டும் ஒரு எளிமையான விளக்கப்படம் என்னிடம் இருக்கிறது. நீங்கள் கனடாவின் வரிவிகிதத்தைப் பாருங்கள், அமெரிக்க பாலாடை கட்டி, நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 300% வரி விதிக்கிறது.

இந்தியாவின் வரிவிகித்தைப் பாருங்கள், அமெரிக்க மதுவகைகளுக்கு 150 சதவீதம் வரி விதிக்கிறது. கென்டக்கி போர்பனை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய உதவும் என்று நினைக்கலாம், நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் வேளாண் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஜப்பான் அரசு அரிசிக்கு 700% வரிவிதிக்கிறது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரித்திட்டம் தான் அமெரிக்கப் பொருட்களுக்கு வரியைக் குறைக்க உதவும் என நம்புகிறார். அமெரிக்க வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு அதிபர் ட்ரம்ப் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளார். நியாயமான வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி வரியை செயல்படுத்துங்கள் என்றுதான் அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகளிடம் கேட்கிறார். ஆனால் கனடா அரசு எங்களுடன் நியாயமற்ற வர்த்தக முறையை பல தசம ஆண்டுகளாக செயல்படுத்துகிறது.

இவ்வாறு கரோலின் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: இந்தியாவை பாரத் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிரடி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share