×
 

அடித்து நொறுக்கும் மோடி..! இந்தியா-மொரிஷியஸ் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இந்தியா-மொரிஷியஸ் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் நரேந்திர மோடியும், மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமும் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு (MoUs) சாட்சியாக நின்ற நிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குற்ற விசாரணை, கடல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, வர்த்தகம், நிதி, பெருங்கடல் பொருளாதாரம் ஆகியவற்றை குறித்து இருதரப்பினரும் பேசி மேலும் அதிக புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டனர். மொரிஷியஸ் தேசிய தினத்தில் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்கள், “மேம்பட்ட மூலோபாய கூட்டாண்மையை” வலியுறுத்துகின்றன.

 

இந்திய பிரதமர் மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம், இருவரும் சேர்ந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியப் பெருங்கடலை தாண்டிய பண்பாட்டு பிணைப்புகளை மோடி பாராட்டினார்.“பேரிடர்களிலும் முன்னேற்றத்திலும் நாம் ஒன்றாக நின்றோம், பாதுகாப்பு முதல் சுகாதாரம், விண்வெளி வரை தோளோடு தோள் நடக்கிறோம்,” என்றார். 

இதையும் படிங்க: இந்தியாவை பாரத் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிரடி.!

மெட்ரோ எக்ஸ்பிரஸ், உச்ச நீதிமன்ற கட்டடம், UPI அறிமுகம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய அவர், புதிய நாடாளுமன்ற கட்டடம், 100 கி.மீ நீர் குழாய் மேம்பாடு, 500 மில்லியன் மொரிஷியஸ் ரூபாய் சமூக திட்டங்களை மொரிசியஸ் பிரதமர் அறிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 மொரிஷியஸ் அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி பெறுவர், வர்த்தகம் உள்ளூர் நாணயத்தில் நடக்கும். கடல் பாதுகாப்பு இரு நாடுகளுக்கு முக்கியமான ஒன்றாகும், இந்திய காவல் பயிற்சி நிலையம், கடல் தகவல் மையத்திற்கு உதவும். “சுதந்திரமான, பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் எங்கள் முன்னுரிமை,” என மோடி தெரிவித்தார். 

கொழும்பு பாதுகாப்பு மாநாடு வழியாக மொரிஷியஸ் பொருளாதார மண்டலத்திற்கு ஆதரவு தரப்படும் என மோடி உறுதியளித்தார். AI, டிஜிட்டல் உள்கட்டமைப்பு,  ஆன்மீக யாத்திரை போன்ற கலாச்சார திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். 

மொரிஷியஸ் பிரதமர் ராம்கூலம் மோடியின் வருகையை “தனித்துவமான உறவின்” அடையாளமாக வரவேற்றார். 1948-ல் தொடங்கிய தூதரக உறவுக்கு முன்பே நூற்றாண்டு கால புலம்பெயர் பிணைப்பை நினைவுகூர்ந்தார். “நேற்றைய சமூக நிகழ்வு நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை காட்டியது,” என்றார். இந்தியா அளித்து வரும் உதவிகளுக்கு தனது நன்றியும் பாராட்டுகளையும் மொரிசியஸ் பிரதமர் தெரிவித்தார்.

முக்கிய ஒப்பந்தங்களில் ரிசர்வ் வங்கி-மொரிஷியஸ் மத்திய வங்கி உள்ளூர் நாணய பரிவர்த்தனை, SBI நீர் உள்கட்டமைப்பு கடன், தூதரக-அதிகாரி பயிற்சி ஒப்பந்தங்கள் அடங்கும். வெள்ளை கப்பல், நிதி குற்ற தடுப்பு, MSME, பெருங்கடல் ஆராய்ச்சி ஒப்பந்தங்கள் பாதுகாப்பு, பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துகின்றன என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன் மொரிஷியஸில் தொடங்கிய SAGAR திட்டத்தை மோடி நினைவுகூர்ந்து, மொரிஷியஸ் இந்தியா இடையே உறவு மேலும் வலுப்பட்டு பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை தொடர வேண்டுமென கூறினார். இந்த ஒப்பந்தங்கள், ஆளுகை முதல் கலாச்சாரம் வரை இந்தியா-மொரிஷியஸ் உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: மாஸ் என்ட்ரி கொடுத்த எலான் மஸ்க்… விரைவில் இந்தியாவில் ஸ்டார் லிங்க்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share