×
 

வரியைக் குறைக்க இந்தியா சம்மதம்..! வெளிப்பட்டுவிட்டார்கள்... தரக்குறைவாகப் பேசிய அதிபர் ட்ரம்ப்..!

இந்தியா, அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்து வந்த வரியைக் குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. அதிகமான வரி இருக்கும் வரை இந்தியாவில் எதையும் விற்பனை செய்வது சாத்தியமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டன் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா அமெரிக்கா மீது மிக அதிகமாக வரி விதிக்கிறது. இப்படியெல்லாம் வரி விதித்தால் இந்தியாவில் எந்தப் பொருளையும் விற்க முடியாது. இது கிட்டத்தட்ட கட்டுப்படுத்தக்கூடியது. உங்களுக்குத் தெரியுமா நாங்கள் குறைந்தளவுதான் இந்தியாவில் வர்த்தகம் செய்ய முடிகிறது. 

சொல்லப்போனால், இந்தியா வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் செயல்பாடுகளை யாரோ ஒருவர் அம்பலப்படுத்துவதால், இப்போது தங்கள் வரியைக் குறைக்க விரும்புகிறார்கள். அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு குறைவான வரி விதிக்கிறோம் ஆனால், அந்த நாடுகள் எங்கள் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன. இதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பரஸ்பர வரிவிதிப்பை ஏப்ரல் 2ம் தேதி நடைமுறைப்படுத்துகிறோம். அது நடைமுறைக்கு வந்தால் அதிக வரிவிதிக்கும் நாடுகள் வரியைக் குறைக்கும்” இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விபத்தில் 1.80 லட்சம் பேர் பலி... ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர்..!!

கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “ அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் மாற்றம் வருகிறது. பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்கா அமல்படுத்துகிறது. அமெரிக்க பொருட்களுக்கு அதிகமான வரிவிதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் அதிக வரிவிதிக்கும். இனிமேல் அமெரிக்கா எதையும் பொருத்திருக்காது, மற்ற நாடுகள் லாபம் ஈட்டுவதையும் அமெரிக்கா வேடிக்கை பார்க்காது.

இந்தியா நம்முடைய ஆட்டமொபைல் இறக்குமதிக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரிவிதிக்கிறது. பரஸ்வரி திட்டம் நடைமுறைக்குவரும்போது நிச்சயம் மாற்றம் வரும். இதற்கு முன் அமெரிக்கா பொருட்கள் மீது ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட எண்ணற்ற நாடுகள் நாங்கள் விதித்த அளவைவிட அதிக வரிவிதித்து வந்தன. அதிலும் இந்தியா 100 சதவீதத்துக்கும் மேல் வரிவிதித்தது. இந்தநிலை இனிமேல் மாறும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரியும், சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: 'சித்திரவதை காத்திருக்கிறது...' இந்தியாவிடம் தப்பிக்க ராணா அமெரிக்காவிடம் போட்ட நாடகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share