×
 

இந்திய நிலம் ஆக்கிரமிப்பா?: வங்க தேச எல்லையில் பதற்றம்; பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்திப்பு!

இந்தியாவின் நிலத்தை வங்காளதேசம் ஆக்கிரமித்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் இருநாட்டு பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலம் அருகே, இந்தியா - வங்காள தேசம் இடையே நீண்ட எல்லை பகுதி உள்ளது.

வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கும்
 (பி எஸ் எப் )வங்காளதேச எல்லை காவல் படையினருக்கும் (பிஜிபி) இடையே கடந்த ஒரு வாரமாக பதற்றம் இருந்து வருகிறது. 

இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் ஐந்து சதுர கிலோமீட்டர் பகுதியில் வங்காளதேசம் ஆக்கிரமித்ததாகவும் எழுந்த பிரச்சினையே இதற்கு காரணமாகும்.  இருநாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பலமுறை சந்தித்து பேசுவது வழக்கம். 

இதையும் படிங்க: உலக பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியாவிற்கு 85 வது இடம்

இதுவரை இருதரப்பினருக்கும் இடையே மோதல் எதுவும் வந்ததில்லை. இருப்பினும் பல இடங்களில் பதற்ற நிலை இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வியாழன்  அன்று பெட்ராப் போல் எல்லையில் இரு தரப்பு படை பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பது, எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான கூட்டு முயற்சிகள், எல்லைப் பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள், சட்டவிரோத எல்லை தாண்டுதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் எல்லை மேலாண்மை உள்ளிட்ட இரு தரப்பு நலன்கள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

வங்காளதேச எல்லையின் இந்திய எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு மற்றும் ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த பதற்றம் ஏற்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த சில நாட்களாக எல்லையில் வேலி கம்பிகள் அமைக்கும் போது சில இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்ததாக எழுந்த பிரச்சனையை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு பிறகு சற்று தணிந்து உள்ளது.

இதையும் படிங்க: ஜிஎஸ்டி சர்வர் டவுன்! ரிட்டன் தாக்கல் இன்று கடைசி நாளில் வரி செலுத்துவோர் அவஸ்தை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share