×
 

மாபெரும் வன்முறை..! இந்துக்கள் தாக்கப்பட்டால் இனிக்கிறதா..? வெட்கக்கேடான ராகுலின் மௌனம்..!

ராகுல் காந்தி மணிப்பூர் வன்முறை குறித்து பேசுகிறார். ஆனால் முர்ஷிதாபாத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்?

வக்ஃபு சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் உட்பட பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. அவர்களின் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் அடித்து நொறுக்கப்பட்டனர். இதனால், நூற்றுக்கணக்கான இந்துக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் பாஜக மம்தா அரசைத் தாக்கி வருகிறது. ஆனால் சமூக ஊடகங்களில்கூட கருத்து தெரிவிக்காமல் ராகுல் காந்தி ஏன் அமைதியாக இருந்து வருகிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். இதுவரை அவர் பொதுவில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் எந்த ட்வீட்டும் செய்யவில்லை. இது கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயமா அல்லது வேறு ஏதாவது காரணமா?

இதையும் படிங்க: #BREAKING: சோனியா, ராகுல்காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..! அமலாக்கத்துறை அதிரடி..!

 சமூக ஊடகங்களில் ஏதாவது ஒன்றை பதிவிட்டு வரும் அவர், இந்த வன்முறை கூறித்து ஒன்றுமே எழுதவில்லை. அவரது மௌனம் பாஜக, சமூக ஊடக பயனர்களுக்கு ஒரு பெரிய தாக்குதல் ஆயுதமாக மாறியுள்ளது. எக்ஸ்தளப்பயனர் ஒருவர், ''ராகுல் காந்தி மணிப்பூர் வன்முறை குறித்து பேசுகிறார். ஆனால் முர்ஷிதாபாத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? டி.எம்.சி-யை வருத்தப்படுத்த வேண்டாமா?'' எனக் கேட்டுள்ளார். மற்றொருவர், ''காங்கிரஸின் இந்து எதிர்ப்பு முகம் மீண்டும் அம்பலமாகிவிட்டது. ராகுல் காந்தியின் மௌனம் வெட்கக்கேடானது'' எனக் கண்டிடுத்துள்ளார்.

சில கட்சித் தலைவர்கள் இந்த வன்முறையைக் கண்டித்துள்ளனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், "முர்ஷிதாபாத்தோ அல்லது வேறு எங்கும் எந்த வகையான வன்முறையையும் நாங்கள் எதிர்க்கிறோம். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறினார்.

ஆனாலும், இந்துக்கள் மீதான தாக்குதல், இடம்பெயர்வு பிரச்சினை பற்றி அவர் பேசவில்லை. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ''வன்முறை துரதிர்ஷ்டவசமானது. நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். நாங்கள் அமைதிக்காக வேண்டுகோள் விடுக்கிறோம்'' என்பதோடு முடித்து கொண்டார்.

பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ''முர்ஷிதாபாத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் திருப்திப்படுத்தும் கொள்கையின் விளைவு. இது குறித்து காங்கிரஸ், ராகுல் காந்தியின் மௌனம் வெட்கக்கேடானது. காங்கிரஸ் இரட்டை சவாலை எதிர்கொள்கிறது என்று அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.

ராகுல் காந்தி இந்துக்கள் மீதான தாக்குதல் பிரச்சினையை எழுப்பினால், டி.எம்.சி உடனான கூட்டணி முறிந்து போகக்கூடும். வங்காளத்தில் காங்கிரஸ் ஏற்கனவே பலவீனமாக உள்ளது. அவர்கள் அமைதியாக இருந்தால், பாஜகவுக்கு இந்து எதிர்ப்பு கதையை நடத்த வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இழக்கவோ, பாஜகவின் வலையில் சிக்கிக் கொள்ளவோ ​​விரும்பவில்லை. ஆனால் இந்த மௌனம் அவரது நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்'' என எச்சரித்துள்ளார்.

முன்னதாக, மணிப்பூர் வன்முறை, டெல்லி கலவரம் குறித்து ராகுல் காந்தி வெளிப்படையாகப் பேசியிருந்தார். மணிப்பூரில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். காங்கிரஸ் தலைவர்கள் நாடாளுமன்றத்தை செயல்படக்கூட அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியே பல ஆர்ப்பாட்டங்கள் பதாகைகளை அசைத்து நடத்தப்பட்டன. ஆனால் ராகுல் காந்தி மட்டுமல்ல, இந்திய கூட்டணியின் மற்ற தலைவர்களும் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வ

இதையும் படிங்க: இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share