×
 

மோடியின் உற்சாக சந்திப்பு தோற்றுப்போனது..! வங்கதேச விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த கார்கே..!

வங்கதேசத்தில் இந்து சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து அந்நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் தற்போது வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர் பபேஷ் சந்திர ராய் மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கி விட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். வங்கதேசத்தில் இந்து சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் வங்கதேசத்தின் தலைமை ஆலோசகருடனான மோடியின் புன்னகையுடன் கூடிய சந்திப்பு தோல்வியடைந்தது என்றும் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: 11 மாதங்களில் முதல்வரே அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகப் போகிறார்.. விளாசிய தமிழிசை..!

இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலின்படி, கடந்த இரண்டு மாதங்களில், இந்துக்கள் மீது 76 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் 23 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், பிற மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் தொடர்வதாகவும் கூறியதாக தெரிவித்தார். 1971 முதல் இன்று வரை, வங்கதேசத்தின் அனைத்து மக்களுக்கும் அமைதியும் செழிப்பும் கிடைக்க இந்தியா எப்போதும் விரும்புவதாகவும் கார்கே குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கற்பனை உலகில் வாழ்கிறார் முதல்வர்.. வாராந்திர டிராமாவை நிறுத்துங்க.. எகிறி அடித்த அண்ணாமலை.!!.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share