கரும்புலி என காட்டி ஏமாற்றி பணம் பறித்த சீமான் ஒரு மன நோயாளி..! கொந்தளிக்கும் கொளத்தூர் மணி..!
கரும்புலி என சீமான் சொல்லியதை நம்பி லட்ச கணக்கில் பணம் ஏமாந்து போனது உண்மைதான், அந்த பணத்தை சீமானே வாங்கி கொண்டாரா என்ற சந்தேகமும் இப்போது ஏற்பட்டுள்ளது என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
கரும்புலி என சீமான் சொல்லியதை நம்பி லட்ச கணக்கில் பணம் ஏமாந்து போனது உண்மைதான், அந்த பணத்தை சீமானே வாங்கி கொண்டாரா என்ற சந்தேகமும் இப்போது ஏற்பட்டுள்ளது என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
கோவை சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் " தமிழீழமும் திராவிட இயக்கமும் " என்ற தலைப்பில்கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் திவிக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
ஈழத் தமிழர்களுக்கு உதவி:
அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈழ போராட்டம் ஆயுத போராட்டமாக மாறிய பின்பு, போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுத பயிற்சி நடைபெற்றது. அத்தனை பயிற்சிகளும் திராவிட இயக்க தோழர்களால் நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஈரோடு, மேட்டூர், கும்பகோணம் உட்பட பல பகுதிகளில் திராவிட இயக்கத்தினரும், திமுக, அதிமுக கட்சியினராலும் விடுதலை புலிகள் உட்பட அனைத்து ஈழ இயக்கத்தினரும் பயற்சிக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: சீமான் பிரபாகரனைச் சந்தித்தது உண்மையா? - எல்டிடிஇ வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
ஈழ விடுதலை போருக்கான ஆயத்த பணிகள் அனைத்தும் திராவிட இயக்கத்தினரால் வழங்கப்பட்டது. போரில் காயமடைத்த புலிகளின் சிகிச்சைக்கான உதவி, ஆயுதம் அனுப்பியது என அனைத்தும் திராவிட இயக்கத்தினர் செய்தனர். 2009 ஈழ போருக்கு பின்பு, ஈழ போரை
பற்றி அறியாதவர்கள் ஒற்றை புகைபடத்தை மட்டும் வைத்துக் கொண்டு பேசி கொண்டு இருப்பதால் இது போன்ற கருத்தரங்கம் நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது , புலிகளுடன் இருந்ததை திராவிட இயக்கத்தினர் விளம்பரபடுத்த வேண்டும் என்று யாரும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
சீமான் ஒரு மனநோயாளி:
பெரியார் குறித்து பேசுவதற்கு நாம் தமிழர் சீமானுக்கு அரசியல், பொருளாதார காரணம் இருக்கலாம், பெரியார் என்ற திராவிட இயக்க தலைவருக்கு எதிராக பேசி கொண்டு இருப்பதால், எதிர் வினையாற்ற வேண்டி இருக்கிறது, மனநோய் வந்தவர் போல சீமான் பேசுகின்றார்.
பெரியார் குறித்து விமர்சித்தாலும், ஈரோடு தேர்தலுக்காக அமைதியாக இருக்கின்றோம்., அதன் பின் எதிர் வினை இருக்கும்.இடைதேர்தலில் பா.ஜ.க போட்டியிட வில்லை, அதிமுக போட்டியிட வில்லை, ஈரோட்டில் இவ்வளவு வாக்கு வாங்கி இருக்கின்றேன் என சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகின்றார். பெரியார் குறித்து பேசுவதற்கு ஈரோடு தேர்தல் பிரச்சார மேடையில் யாராவது தன்னை அடிக்க மாட்டாங்களா? அதை வைத்து ஓட்டு வாங்கலாமா என பார்க்கின்றார். அதற்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை என தெரிவித்தார்
பணத்தை ஏமாற்றிய சீமான்:
ரூபன் என்பவரை கரும்புலி என காட்டி ஏமாற்றி பணம் வாங்கப்பட்டதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறி இருந்த்தார், சீமான் சொல்லியதை நம்பி பணம் கொடுத்து ஏமாந்து போனது உண்மைதான், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொன்னது உண்மைதான். அனுராதா புரம் தாக்குதலில் யாரும் தப்பவில்லை என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொன்னார். ஆனால் சீமான் நெருக்கமானவராக இருந்ததால் , அவர் சொன்னதை நம்பி பணத்தை தொலைந்தோம், அந்த பணத்தை சீமான் வாங்கிக்கொ போட்ட நல்லய்யா என்பவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கருணாநிதி மகள் எப்படி நாடாராக முடியும்..? ஒரு அப்பாவுக்கு இரண்டு சாதி இருக்குமா..? கனிமொழிக்கு சீமான் சம்மட்டி அடி..!