×
 

புது வெள்ளை மழையில் கொடைக்கானல் ... உறைபனியை ரசிக்க குவியும் சுற்றுலாபயணிகள்..!

கொடைக்கானலில் உறைபனி சூழல் உண்டாகியுள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கொடைக்கானலில் உறைபனி சூழல் உண்டாகியுள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தமிழகத்தில் தற்போது மார்கழி தொடங்கியுள்ள காரணத்தால், பனிப்பொழிவு அதிகரிக்கிறது. குறிப்பாக இனி வரும் நாட்களில் அதிகாலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .இந்தநிலையில் எப்பவுமே குளுகுளுவென இருக்கும் கொடைக்கானலில் உறைபனி சூழல் உண்டாகியுள்ளது

அதிகாலை நேரத்தில் பசுமை போர்த்திய புல்வெளிகள் மற்றும் மலைகளில் வெண்கம்பளம் விரித்த போன்ற காட்சி சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளித்தது . குறைந்தபட்சமாக  ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகிய நிலையில் கொடைக்கானல் ஏரி சாலை , பிரையன்ட் பூங்கா, ஜிம்காணா, கீழ்பூமி ஆகிய பகுதிகளில் உறை பனி காணப்பட்டது. பனிப்பொழிவை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்

இதையும் படிங்க: "அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்" ..புஷ்பா பட பாணியில் பேசிய அன்பில் !

இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share