×
 

‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..

“பாரத்போல்” தளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் உள்ள மத்திய விசாரணை அமைப்புகள், மாநில போலீஸார், குற்றவழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும்  சர்வதேச போலீஸான இன்டர்போல் உதவியை எளிதாக அணுகும் “பாரத்போல்” தளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

இந்த பாரத்போல் தளத்தின் மூலம் மாநில போலீஸார், மத்திய விசாரணை அமைப்புகள் குற்றவழக்குகள் தொடர்பாக தங்களுக்கு தேவையான தகவல்களை இன்டர்போலிடம் கேட்டுப் பெற முடியும், தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதற்கு முன் மத்திய விசாரணை அமைப்புகள் வழியாகவே மாநிலப் போலீஸார் தகவல்களை இன்டர்போலிடம் இருந்து பெற்று வந்தனர், இனிமேல் நேரடியாகவே இன்டர்போல் போலீஸார் உதவியை மாநில போலீஸார் அணுக முடியும். 
இந்த பாரத்போல் மூலம் இந்தியாவில் குற்றங்களைச் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக ரெட் அலர்ட் நோட்டீஸ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் அலர்ட் வழங்கவும் இந்தத் தளத்தின் மூலம் செய்ய முடியும்.
டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரத்போல் தளத்தை அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:


பாரத்போல் போர்டல் இன்று நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாரத்போல், நம் தேசத்தின் சர்வதேச விசாரணை புதிய சகாப்தத்துக்கு எடுத்துச் செல்லும். இதற்கு முன் சிபிஐ அமைப்பு மட்டுமே இன்டர்போலுடன் உரையாடி, தகவல்களை பெற்று வந்தது, இனிமேல் ஒவ்வொரு மாநிலப் போலீஸாரும் குற்றவழக்குகள் தொடர்பாக இன்டர்போல் போலீஸாரை நேரடியாக அணுகி, தொடர்பு கொண்டு தகவல்களை பெறவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதன் மூலம் இடைவெளியைக் குறைத்து, குற்றங்கள் நடப்பதைக் கட்டுப்படுத்த முடியும்.
சிபிஐ சார்பில் உருவாக்கப்பட்ட இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்கது. இனிமேல், நம்நாட்டில் உள்ள மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் தங்கள் விசாரணையை உலகளவில் விஸ்தரிக்க முடியும். அனைவருக்கும் இந்த பாரதம் பாதுகாப்பானது என்ற அரசின் குறிக்கோள் நிறைவேறி வருகிறது” எனத் தெரிவித்தார்.


உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ நாடுகளுக்கு இடையிலான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சைபர் கிரைம், ஆட்கடத்தல், நிதி மோசடி, ஆன்லைன் அச்சுறுத்தல், போதை மருந்து கடத்தல், திட்டமிட்ட குற்றச்செயல் ஆகியவற்றுக்கு விரைவாக சர்வதேச போலீஸாரின் உதவியை இந்த பாரத்போல் தளத்தின் மூலம் பெற முடியும். இந்த பாரத்போல் தளத்தை சிபிஐ தளத்தின் வழியாக பிறமாநிலங்களின் போலீஸார் அணுக முடியும்.” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள்: 3 பேர் பலி; மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்..

பாரத்போல் அம்சங்கள் என்ன
1.    விரைவாக தகவல்கள் இன்டர்போலிடம் மத்திய விசாரணை அமைப்புகளும், மாநில போலீஸாரும் பகிர்ந்து கொள்ள முடியும், பெற முடியும்.
2.    இன்டர்போல் உதவியை நாடுவதற்கு அனைத்து மாநிலப் போலீஸாருக்கும் எந்த தடையும் இல்லாத ஒருங்கிணைந்த தளம். இதன் மூலம் மாநில போலீஸார் கூட ரெட் அலர்ட் நோட்டீஸை பார்க்கலாம், இன்டர்போல் விசாரணைக்குத் தேவையான தகவல்களை தரமுடியும்.
3.    மத்திய விசாரணை அமைப்புகளின் பல பிரிவுகள், மாநில போலீஸாரின் பல பிரிவுகள், ஒருங்கிணைந்து செயல்படவும், தகவல்தொடர்புகளை எளிமைப்படுத்தவும் இந்தத் தளத்தின் மூலம் முடியும்.
4.    பழையமுறையிலான தகவல் தொடர்பான கடிதம், மெயில், பேக்ஸ் போன்றவற்றை அகற்றிவிட்டு, புதியஅதிநவீன தகவல் தொடர்பு முறைகள் இந்த பாரத்போல் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
5.    சர்வதேச குற்றங்கள், குற்றவாளிகளை தேடுவதற்கும்,தேட உதவி கேட்கவும் இந்தத் தளத்தின் மூலம் முடியும். குறிப்பாக சைபர் கிரைம், நிதிமோசடி, ஆட்கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோர் நாடுவிட்டு நாடு சென்றால் அவர்களை கண்காணித்து கைது செய்யவும் இந்த தளத்தின் மூலம் முடியும்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால் படு பாதாளத்துக்குப் போன செல்வாக்கு...!! ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகியதின் பின்னணி....

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share