“இப்ப என்ன செய்யுறது?” விழிபிதுங்கி நிற்கும் பாஜக, அதிமுக - விளாசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்!
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் வேண்டாம் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் வேண்டாம் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். உடனடியாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொந்தளித்த அதிமுகவும், பாஜகவும் தமிழக அரசைக் கண்டித்து மாற்றி, மாற்றி போராட்டங்களை அறிவித்துள்ளது.
ஆனால் 5 நாட்களுக்குப் பிறகு ரயில்வேதுறை வெளியிட்ட அறிக்கையில், “
மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் குறித்து கேட்ட கேள்வி அதிக சத்தம் காரணமாக தூத்துக்குடி என்பது தனுஷ்கோடி என புரிந்து கொள்ளப்பட்டதால், நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக ராமேசுவரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் மதுரை எம்.பி... சு.வெங்கடேசனுக்கு என்ன ஆச்சு!
ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதால், தவறாக தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான நில ஆர்ஜிதப் பிரச்சினையும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது போராட்டத்தை அறிவித்துவிட்டு, யாருக்கு எதிராக அதை நடத்துவது எனத் தெரியாமல் பாஜகவும், அதிமுகவும் விழி பிதுங்கி நிற்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார்.
மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக வருகை தந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"மதுரை - தூத்துக்குடி ரயில் ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று
என்று தெரிவித்ததாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் விஷ்ணு தெரிவித்திருந்தார்.அது தவறான செய்தி என்று பேட்டி கொடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.ஆனால் அதற்கு பதிலளிக்காமல் 5 நாட்களுக்கு இந்த செய்திக்கு உயிர் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
ரயில்வே துறை தமிழ்நாட்டை முழுமையாக வஞ்சிக்கிறது மதுரை - தூத்துக்குடி புதிய வழித்தடத்தின் நிலைமை குறித்து கடந்த 6 ஆண்டுகளில் 5 முறை நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக எழுப்பி வருகிறேன்.
ஒன்றிய அரசு அதற்கான நிதியை வழங்குவதில் தாமதித்து கொண்டிருக்கின்றது. வருகிற பட்ஜெட்டிலாவது முழுமையான நிதியை வழங்க வேண்டும்.மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம் கொடுத்தவுடன் பாஜக, அதிமுக போராட்டம் அறிவிக்கின்றது.
ரயில்வே துறை எப்படி இயங்குகின்றது என்ற புரிதல் கூட இல்லாமல் தமிழக அரசை குற்றம் சொல்ல வேண்டும் என்ற ஒரு அரசியலில் மட்டுமே அணுகப்படுகின்றதே தவிர உண்மையான தமிழ்நாட்டுக்கு அணுக்கப்படுகின்ற அநீதிக்கு எதிரான கோபமாக பிரதிபலிக்கவில்லை.பாஜக , அதிமுக அறிவித்த போராட்டங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இன்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
டங்ஸ்டன் திட்டத்திற்கு அண்ணாமலை முதலில் ஆதரவாக பேசினார். மத்திய அமைச்சர் முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று எங்களிடம் தெரிவித்திருந்தார்.மேலூர் மக்கள் இன்று ஒன்று கூடி ஊர்வலமாக வந்த பிறகு ஒன்றிய அரசுக்கு ஒரு பயம் வந்திருக்கின்றது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஒன்றிய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராடங்கள் தொடரும்" என்றார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?