×
 

பாகிஸ்தான் உலகத் தீவிரவாதத்தின் மையம்! இந்தியாவுக்கு அதிக பாதிப்பு: ஐநாவில் இந்தியத் தூதர் கண்டனம்

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டது இந்தியாதான் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர தூதர் தெரிவித்தார்.

உலகத் தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது, ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுகிறோம் என்று பாகிஸ்தான் கூறுவது உச்சக்கட்ட முரண்.  பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டது இந்தியாதான் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர தூதர் தெரிவித்தார். சீனா தலைமையிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று “பன்முகத்தன்மையைக் கடைப்பிடித்தல், உலகளாவிய நிர்வாகத்தை சீர்திருத்துதல் மற்றும் மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் ஜம்மு காஷ்மீர் குறித்து வெளிப்படையான விவாதம் நடந்தது. இதில் ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பர்வதநேனி ஹரிஸ் பங்கேற்று பேசினார்.

அப்போது பாகிஸ்தானின் துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஸ்காக் தார் ஆகியோரின் பேச்சுக்கு கடுமையான பதிலடி கொடுத்து இந்தியத் தூதர் ஹரிஸ் பேசினார். அவர் பேசியதாவது, உலகத் தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது. ஐ.நா. அறிவித்த 20 தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவும், எல்லை தாண்டிய தீவிரவாதத்தையும் பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. தீவிரவாதத்துக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று பாகிஸ்தான் கூறுவது என்பது உச்சக்கட்ட முரணாகும். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளான ஜெய்ஷ் இ முகமது, ஹர்கத் உல் முஜாகிதீன் உள்ளிட்ட 12 தீவிரவாத குழுக்களின் பயங்கரவாத செயல்களால் இந்தியா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வயதில் மூத்த பெண்ணுடன் காதல்.. வடமாநில பெண்ணிடம் செல்போன் பறிப்பு.. ஐபோன் மோகத்தால் கம்பி எண்ணும் காதல் ஜோடி!

ஐநாவின பாதுகாப்பு கவுன்சில் 1267 தடை உத்தரவின்கீழ் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பல தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்து, அவர்களுக்கு உலக நாடுகளில் பயணம் செய்ய தடையும், ஆயுதங்கள், தளவாடங்கள், நிதியுதவி கிடைக்கவும் தடைசெய்திருக்கிறது. கடந்த காலத்தில் சீனா உற்ற நண்பராக பாகிஸ்தானுக்கு இருந்தது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக இந்தியா கொண்டு வந்த பல தடைகளை சீனா நிறைவேற்றவிடாமல் தடை செய்தது. தீவிரவாதத்தை எந்த வடிவத்தில் வந்தாலும், எந்த நோக்கத்தில் வந்தாலும், நகர்வில் இருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது.

இந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாதிகளை நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்று தரம்பிரிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் என்பது எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, பிரிக்க முடியாத பகுதி. பாகிஸ்தான்தான், சட்டவிரோதமாக ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகலை ஆக்கிரமித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உண்மையான அம்சங்களை, களநிலவரத்தை மாற்றுவதற்காக பாகிஸ்தான்த தவறான தகவல்களை பரப்புகிறது, பொய்யான தகவல்களை மக்களிடம் தெரிவிக்கிறது, உண்மைகளை மாற்ற முயற்சிக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் சிறப்பாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. மக்கள் தேர்தலில் பங்கேற்று, வெற்றிகரமாக தேர்தலை நடத்திக்கொடுத்தனர், ஜம்மு காஷ்மீர் மக்களின் தேர்வு என்பது தெளிவாகவும், சத்தமாகவும் இருக்கிறது என்னவென்றால், பாகிஸ்தானைப் போல்  அல்லாமல் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாகவும், ஸ்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறு ஹரிஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்-  கோலத்தில் எதிர்ப்பு ஜாலம் காட்டிய இல்லத்தரசிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share