×
 

2000ம் ஆண்டிலிருந்து.. காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் என்ன..? ஒரு பார்வை..!

கடந்த 25 ஆண்டுகளாக காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் என்ன? ஒரு முழுமையான பார்வை..!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. அதுகுறித்த ஒரு பார்வை..

அதிலும் 2019ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் 370 பிரிவை ரத்து செய்த பின் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் வீரியம் அதிகரித்துள்ளது.

2000ம் ஆண்டு, மார்ச்:

2000ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி அனந்த்காக் மாவட்டத்தில் சத்தீசிங்போரா எனும் கிராமத்தில் சீக்கியர்களை குறிவைத்து தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டதாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். அதுதான் மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலாகும். 

இதையும் படிங்க: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. டெல்லி, மும்பை, உள்பட முக்கிய நகரங்கள் ஹை அலர்ட்..!

2000ம் ஆண்டு, ஆகஸ்ட்:

2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நுவான் பேஸ் கேம்ப் அருகே அமர்நாத் புனித யாத்திரை சென்ற யாத்ரீகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

2001, ஜூலை:

2001ம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் அமர்நாத் யாத்ரீகள் மீது தீவிரவாதிகள் குறிவைத்தனர். அனந்த்காக் மாவட்டத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் யாத்ரீகர்கள்  13பேர் கொல்லப்பட்டனர்.

2001, அக்டோபர் 1:

2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடத்தப்பட்டமனித வெடிகுண்டு தாக்குதலில்  36 பேர் கொல்லப்பட்டனர்.

2002, அமர்நாத்:

2002ம் ஆண்டு அமர்நாத் யாத்தீரிகர்கள் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சந்தன்வாரி பேஸ் கேம்ப் பகுதியில் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்டதாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

2002, நவம்பர்:

2002ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் லோவர் முண்டா பகுதியில் ஐஇடி வெடிகுண்டு தாக்குதலில் 9 பாதுகாப்பு படை வீரர்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். 

2003, மார்ச் 23:

2003ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பெண்கள், 2குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

2005, ஜூன் 15:

2005 ஜூன் 15ம் தேதி புல்வாமாவில் அரசு பள்ளி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் உள்பட 13பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006, ஜூன் 12:

காஷ்மீரில் குல்காம் பகுதியில் பணியாற்றிய நேபாளம், பீகார் தொழிலாளிகள் 9 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

2017, ஜூலை 10:

காஷ்மீரில் அனந்த்காக் மாவட்டத்தில் குல்காம் பகுதியில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 யாத்தீர்கள் கொல்லப்பட்டனர். 

2025 ஏப்ரல் 22:

காஷ்மீரின் பஹல்காம் பைசாரன் பகுதியில் தீவிரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2019ம் ஆண்டு புல்வாமாவில் துணை ராணுவப் படையினர் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது மிகப்பெரிய தாக்குதலாகும்.

இதையும் படிங்க: காஷ்மீருக்கு முதல் ‘வந்தே பாரத் ரயில்’.. வரும் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share