×
 

திருப்பூர் சுத்திகரிப்பு ஆலைக்கு பாராட்டு..! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை..!

திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையின் பணியை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று 120 ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை காலம் துவங்க உள்ளதால் தன்னார்வ சேவைகளை மாணவ மாணவிகளை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் கோடை காலத்தில் நீரை சேமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

உலகம் முழுவதும் யோகா, பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக கல்லிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாக யோகா தினத்திற்கு இன்னும் 100 நாட்களுக்கு குறைவாகவே இருப்பதால் யோகா மூலம் உலகம் முழுவதையும் ஆரோக்கியமாக மாற்ற விரும்புகிறோம் என்றும் அதற்கு முன்பு நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமை ஆச்சரியமடைய செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு.. நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு..!

நமது பண்டிகைகள் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையாக காட்டுவதாகவும், ஈத், உழைப்பு த்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி பேசினார். உலகில் அதிக ஜவுளிக்கடைவுகள் உருவாகும் மூன்றாவது நாடு இந்தியா என்று குறிப்பிட்ட பிரதமர், மௌலி கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இந்தியா பிரபலமடைந்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், திருப்பூரில் சாய ஆலயங்கள் இயங்கி வருகிறது என்றும் இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலிகளுக்கு கொண்டு சென்று மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் இதன் மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நொய்யல் ஆற்றில் கலக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கழிவுநீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் உப்பு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் திருப்பூர் தொழில் துறையினரின் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பணிகளையும் பாராட்டுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நேருவின் சாதனையை மோடி முறியடிப்பார்! ராம்தாஸ் அத்வாலே போட்ட கணக்கு…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share