நொண்டி, கூன், குருடு.. ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..? வலுக்கும் கண்டனம்..!
திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பதாக கண்டனங்கள் வலுக்கின்றன.
உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி…ஆனால், திமுகவை பொதுச் செயலாளர் அமைச்சருமான துரைமுருகன் மாற்றுத்திறனாளிகளை நொண்டி கூன் குருடு என பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் திமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மக்களுக்கான திட்டங்களையும் நிதியையும் தருவதை விட்டு வேறு பணிகளில் ஈடுபடுவதாக பேசினார்..
இதையும் படிங்க: மோடி prime minister இல்ல! Picnic minister - மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்
ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும், சலாம் போடுபவர்கள் அங்கு முதல்வராக இருக்க வேண்டும், சலாம் போடாதவரை தூக்கி எறிய வேண்டும் என்று அவர்கள் நினைப்பதாகவும் கூறினார். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதால் தமிழகத்தில் மொழியை அழித்து ஹிந்தியை திணிக்க பார்ப்பதாகவும், மொழியை அழிப்பது, பயம் காட்டுவது, பட்டினி போடுவது தான் அவர்களின் திட்டம், அனைத்து நிதியையும் மத்திய அரசு நிறுத்தினாலும் தமிழகத்தில் தங்களால் ஆட்சி நடத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் தான் கட்சிகள்.. மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை என்றும் அதிமுகவும் பாஜகவும் ஒரே அணியில் சேரும் என்றும் கூறினார். அது மட்டுமல்லாது, நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, தி.மு.க.,வை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் பேசி இருந்தார்.
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பதாக அமைச்சர் துரைமுருகனுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. ஊனமுற்றவர்கள் அனைவரும் மாற்றுத்திறன் படைத்தவர்கள் என்பதால் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க வேண்டுமென அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரே மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பதாக கூறி கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: மாநிலங்களின் உரிமையை நீதிமன்றங்கள் தான் காக்கின்றன.. மெட்ராஸ் பார் அசோசியேஷன் கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!