2000 ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டியா? மத்திய அரசு விளக்கம்..!
2000 ரூபாய்க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது குறித்து பரிசீலிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2000 ரூபாய்க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது குறித்து பரிசீலிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் எந்த அடிப்படையிலும் இல்லாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிலவற்றின் அடிப்படையில் பணம் தொடர்பான வணிகத் தள்ளுபடி விகிதம் (எம்.டி.ஆர்) போன்ற கட்டணங்களில் GST விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் தனி நபரிடம் இருந்து வர்த்தகருக்கு (PERSON TO MERCHANT) UPI பரிவர்த்தனைகள் மீதான MDR ஐ நீக்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. UPI பரிவர்த்தனைகளுக்கு MDR வசூலிக்கப்படுவதில்லை என்பதால், இந்த பரிவர்த்தனைகளுக்கு GST எதுவும் பொருந்தாது என்றும் UPI மூலம் டிஜிட்டல் பணம் செலுத்துவதை ஊக்குவிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி கூகுல் பே பண்ணாலும் ஜிஸ்டியா? இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? புலம்பும் மக்கள்!!
UPI இன் வளர்ச்சியை ஆதரிக்கவும், நிலைநிறுத்தவும், 2021-22 ஆம் நிதியாண்டிலிருந்து ஊக்கத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்தத் திட்டம் குறிப்பாக குறைந்த மதிப்புள்ள (P2M) பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டுள்ளது எனவும் பரிவர்த்தனை செலவுகளைக் குறைப்பதன் மூலம் சிறு வணிகர்களுக்கு பயனளிபோது மட்டுமல்லாமல் டிஜிட்டல் பணம் செலுத்துவதில் பரந்த பங்கேற்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துகிறது என்றும் கூறியுள்ளது.
UPI பரிவர்த்தனை மதிப்புகள், 2019-20 நிதியாண்டில் 21.3 லட்சம் கோடியிலிருந்து, மார்ச் 2025க்குள் 260.56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது., குறிப்பாக, P2M பரிவர்த்தனைகள் ரூ.59.3 லட்சம் கோடியை எட்டியுள்ளன, இது வணிகர்களின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் நுகர்வோரின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: UPI சேவைகளில் அதிரடி மாற்றம்! இனி வாரா வாரம் மொபைல் எண் அப்டேஷன் செய்யணுமாம்..!