UPI சேவைகளில் அதிரடி மாற்றம்! இனி வாரா வாரம் மொபைல் எண் அப்டேஷன் செய்யணுமாம்..!
யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நடைமுறைகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிமுறைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது.
UPI மூலம் செலுத்தும் நடைமுறைகளில் புதிய விதிமுறைகளை தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் கொண்டு வருகிறது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் மூலம் UPI பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ சேவை வழங்குனர்கள், மூன்றாம் தரப்பு செயலிகள், அனைத்து யுபிஐ உறுப்பினர் வங்கிகள் புதிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக செயலில் இல்லாத மொபைல் எங்களுடன் இணைக்கப்பட்ட யுபியை முகவரிகள் செயலிழக்கம் செய்யப்படும் என்று புதிய விதிமுறைகளை கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எலான் மஸ்க் அமைச்சர் பதவிக்கு ‘முழுக்கு’..? என்ன காரணம்..?
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்களை செயலற்றதாக வங்கிகள் எப்போது கருதினாலும் பயனர்கள் தங்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் இவ்வாறு செய்ய மறுக்கும் பட்சத்தில் யுபிஐ சேவை பயன்படுத்தாத நிலை ஏற்படும் எச்சரித்துள்ளது.
நீண்ட நாட்களாக செயலிழந்து இருக்கும் மொபைல் எண்களில் உள்ள யுபிஐ முகவரி தானாக நீக்கப்படும் என்றும் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் பயனர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படி யுபிஐ சேவை முகவரிகள் நீக்கப்பட்டால் பண பரிவர்த்தனை செய்ய இயலாது என்றும் யு.பி.ஐ. சேவைகள் முடக்கப்படாமல் இருக்க சரியான மொபைல் எண் அப்டேட் செய்யப்படுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
பயனரின் வங்கியால் உறுதிப்படுத்தப்பட்ட மொபைல் எண் அவரது என் சார்ந்த யுபிஐ முகவரியாக இருக்கும் என்று புதிய விதிமுறையில் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது வங்கிகள் மற்றும் யுபிஐ சேவை வழங்கினார்கள் தங்களது மொபைல் எண் பதிவுகளை வாராந்திர அடிப்படையில் அப்டேட் செய்ய வேண்டும் என்றும் பயண நலன்களை பாதுகாக்க எண் UPI முகவரிகளை ஒதுக்குவதற்கு முன்பு பயன்பாடுகளுக்கு வெளிப்படையான ஒப்பந்தம் தேவைப்படும் இதனை தானாக செயல்படுத்தும் செட்டி செயலற்று இருக்கும் என்பதால் பயனர்கள் தாங்களாகவே தேர்வு செய்ய வேண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூர் சுத்திகரிப்பு ஆலைக்கு பாராட்டு..! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை..!