அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா... 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊரில்...!
அமைதிக்கான முதல் நோபல் பரிசு வென்ற மலாலா, 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானின் சொந்த ஊருக்கு வந்தார்.
பாகிஸ்தான் நாட்டில், அமைதிக்கான முதல் நோபல் பரிசு வென்றவர் மலாலா யூசப்சையி. தலிபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு விரட்டப்பட்ட மாலாலா தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்.
அவர் ஷாங்க்லா மாவட்டத்திலுள்ள பர்கானாவுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்து அங்கு தனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசினார். தனது பயணத்தின் போது நோயில் வாடியமாமா ரமாசானை அவர் சந்தித்து பேசினார். மற்ற இடங்களுக்கு செல்வதற்கு முன்பாக தனது மூதாதையர் கல்லறைகளிலும் மாலா மரியாதை செலுத்தினார்.
மலாலாவுடன் அவருடைய தந்தை ஜியாவுதீன் யூசுப் சாய் மற்றும் 2021 இல் அவர் திருமணம் செய்து கொண்ட அவருடைய கணவர் ஆசீர் மாலிக் ஆகியோர் இருந்தனர். மலாலாவின் முக்கிய சிறப்பு அம்சங்களில் ஒன்று 2018 ஆம் ஆண்டு பர்கானாவில் அவர் தொடங்கிய பள்ளி மற்றும் கல்லூரிக்கு மேற்கொண்ட பயணமாகும். இந்த நிறுவனம் முன்பு பெண்களுக்கான அரசு கல்லூரி இல்லாத பகுதியில் சுமார் 1000 சிறுமிகளுக்கு இலவச கல்வி வழங்கி வந்தது.
இதையும் படிங்க: இந்தியாவிற்குள் ஊடுருவிய பாக்., ஐஎஸ்ஐ-யின் ஸ்லீப்பர் செல்ஸ் .. மாபெரும் சதித் திட்டம்… 35 பேர் கைது..!
அங்கு படிக்கும் மாணவர்கள் சந்தித்து வகுப்புகளை ஆய்வு செய்து ஒளிமயமான எதிர்காலத்திற்காக அவர்களின் கல்வியில் கவனம் செலுத்த ஊக்குவித்தார். பின்னர் மலாலா தனது தாய் வழி குடும்பம் வசிக்கும் ஊருக்கு சென்று ஜிந்தகி அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் கல்வி ஆர்வலரையும் சந்தித்தார்.
தலையில் சுடப்பட்ட போது...
2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கல்வி ஆர்வலரான மலாலா பெண்களின் கல்வி உரிமைக்காக போராடியதற்காக தலீபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை நினைவு கூர்ந்த மலாலா, ஒரு பதிவில் "அக்டோபர் 2018 பாகிஸ்தான் தாலிபன் உறுப்பினர் ஒருவர் எனது பள்ளி பேருந்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டார். அந்த குண்டு எனது இடது கண் மண்டை ஓடு மற்றும் மூளையை துளைத்து எனது முகநரம்பை கிழித்து, காது குழலை உடைத்து தாடை மூட்டுகளையும் உடைத்தது உள்பட கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
உயிருக்கு ஆபத்தான காயங்களை சந்தித்த மலாலா அவருடைய குரலை அடக்குவதற்காக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கல்வி மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக போராடுவதற்கான அவருடைய உறுதியை வலுப்படுத்தியது. துப்பாக்கி சூடு பற்றிய சரியான விவரங்கள் மலாலாவுக்கு நினைவில் இல்லை என்றாலும் அது தனக்கும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுக்கும் ஏற்படுத்திய நீடித்த தாக்கத்தை அவர்விவரித்தார்.
மருத்துவர்கள் என் உடலில் இருந்து தோட்டாவை அகற்றிய வடுவை இன்னும் என் முதுகில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று எழுதினார் அவர் இந்த சம்பவம் மலாலாவின் மீது மட்டுமல்ல தாக்குதலின் போது அங்கிருந்த அவருடைய நண்பர்களிடமும் உடல் மற்றும் உணர்ச்சி வடுக்களை ஏற்படுத்தியது. கொடூரமான தாக்குதலுக்கு மத்தியிலும் மலாலா தனது ஆதரவை தொடர்ந்தார். கல்வி மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான உலகளாவிய சின்னமாக மாறினார். உலக அளவில் கல்வியில் சம வாய்ப்புக்காக போராடும் லட்சக்கணக்கான அவர்களுக்கு அவர்கள் கதை ஒரு உத்வேகமாக உள்ளது.
2011 தாக்குதலுக்கு பிறகு அவர் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக 2018ல் பயணம் செய்தார். பின்னர் 2022-ல் மீண்டும் அங்கு சென்ற அவர் அப்போது பேரழிவு தரும் பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். 2024 ம்ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் முஸ்லிம் சமூகங்களில் பெண்களின் கொடுத்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள இஸ்லாமாபாத் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருந்துமா அடிவருடி அடிமை பாகிஸ்தான்..? ராஜ தந்திரங்களால் வியக்க வைக்கும் ஆப்கானிஸ்தான்..!