இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நான்தான் பாதுகாப்பு.. எனக்கு எதுக்கு பாதுகாப்பு என்று சீமான் கேள்வி!!
இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் நான்தான் பாதுகாப்பு என்கிறார் சீமான்
விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு என்பது 'மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லாதது' என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"தம்பி விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவர் கேட்டு பெற்று இருக்கிறார். எனக்கு அது தேவைப்படவில்லை. நான் எப்போதும் நினைப்பேன், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் நான்தான் பாதுகாப்பு என்று. அதனால், எனக்கு எதுக்கு பாதுகாப்பு? நான் என்னுடைய தம்பி, தங்கைகளைச் சந்திக்கிறேன். மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இது ராணுவ அரசியலுக்குதான் தேவை, மக்கள் அரசியலில் இல்லை.
மக்கள் அரசியலில், புகைப்படம் எடுத்து கொள்ளலாமா என்று கேட்பார்கள். அவர்களுக்காகத்தானே வேலை செய்ய வந்திருக்கிறோம். மண்ணை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் மனதை வெல்ல வேண்டும். பாஜகவில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள். அது அவர்கள் கட்சி. அவர்களது கட்சியின் தலைமை முடிவு எடுக்கும். இதற்கெல்லாம் கருத்து கேட்கக் கூடாது. வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து த.வெ.க.,வினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். எதிராக போராட வேண்டும் என்ற உணர்வு மதிக்கதக்கது." என்று சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுசு புதுசா தேர்தல் நேரத்தில் நாடகமாடுகிறது திமுக..! சீமான் விளாசல்..!