×
 

தமிழ்நாட்டில் அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சம் ஆக அதிகரிப்பு

திமுக ஆட்சியின் தோல்விக்கு எடுத்துக்காட்டு - அன்புமணி ராமதாஸ்...

தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை  6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதற்கு இதை விட  பெரிய சான்று எதுவும் தேவையில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட  தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியதை நினைவுகூர்ந்துள்ளார். அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மேலும் 2 லட்சம் பணியிடங்களை புதிதாக உருவாக்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்ததை அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார்.

இதையும் படிங்க: இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கணிப்பு!

ஆனால், அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதுடன், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக ஏற்பட்ட மூன்று லட்சம் காலியிடங்களையும் திமுக அரசு நிரப்பவில்லை என்பதைத் தான் அரசு ஊழியர் அமைப்புகள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக கடந்த  நான்காண்டுகளில்  34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் 1.30 கோடி பேர் அரசு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலையில் ஆண்டுக்கு பத்தாயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது  இளைய தலைமுறையினருக்கு இழைக்கப்படும்  பெரும் துரோகம் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.  அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, எல்லா பணியிடங்களிலும்  ஒப்பந்த முறையிலும், குத்தகை அடிப்படையிலும் தான்  பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை என்பதும் அவரின் குற்றச்சாட்டாகும். 
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள  6.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share