×
 

ஒரே ஓட்டலில் ஏரெடுத்தும் பார்க்காத அமித் ஷா... இலவுகாத்த கிளியான ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு...! 

பாஜகவையும் டெல்லி தலைமையையும் மலை போல நம்பி இரவு முழுக்க இலவு காத்த கிளியாக ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த ஓ பன்னீர்செல்வத்தை அமித் ஷா ஏரெடுத்து கூட பார்க்காதது கவனிக்க வைக்கிறது

கூட்டணியை இறுதி செய்வதற்காக சென்னை வந்திருந்த அமித் ஷாவின் பயண திட்டம் இறுதி நேரத்தில் மாற்றி அமைக்கப்பட்டு பல திருப்பங்களுடன் அமைந்திருந்தது. அதிமுக பாஜகவினரை கடைசி நிமிடம் வரைக்கும் பரபரப்புக்குள்ளேயே வைத்திருந்தது. வியாழக்கிழமை இரவு சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் ஐடிசி ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அதில் ஒன்று கூட திட்டமிட்டபடி நடைபெறவில்லை. 

குறிப்பாக தமிழிசையின் வீட்டுக்கு செல்வதாக திட்டமிடவில்லை என்றாலும் திடீரென சாலிகிராமத்திற்கு விசிட் அடித்த அமித்ஷா, தந்தையை இழந்து வாடும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். அதேபோல மதியத்திற்கு மேல்தான் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழிசை இல்லத்தில் இருந்து புறப்பட்ட அமித் ஷா, அண்ணாமலை மற்றும் எல் முருகனோடு நேராக காலையிலேயே குருமூர்த்தியின் இல்லத்திற்கு சென்றார். அங்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நீடித்தது. குறிப்பாக அமித் ஷா மட்டுமே குருமூர்த்தியோடு தனியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாநில தலைவர் பதவி, கூட்டணி நிலைப்பாடு, தமிழ்நாடு அரசியல் கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகின. 

இதையும் படிங்க: அமித் ஷா, எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்... அடுக்கடுக்காய் அதிரடி கேள்விகளால் துளைத்தெடுப்பு...! 

அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவராக அறிவித்ததும், அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்னதாக தெரிகிறது. ஒருவழியாக அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அண்ணாமலையை பதவியை விட்டு தூக்க வேண்டும் என்ற கன்டிஷன் மட்டும் அல்ல, டிடிவி தினகரன், விகே சசிகலா, ஓபிஎஸ் விவகாரத்திலும் தலையிடக்கூடாது என்பதும் பாஜகவிற்கு இபிஎஸ் விதித்த முக்கியமான கன்டிஷன் எனக்கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட அமித் ஷா பிரஸ் மீட்டில் கூட அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என பகிரங்கமாக அறிவித்தார். 

இதனால் மீண்டும் இலவு காத்த கிளியாக மாறியிருப்பது ஓபிஎஸ் தான். ஏனெனில் அதிமுகவில் மீண்டும் இணைய இதனை ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய வாய்ப்பாக எண்ணிக் காத்துக்கொண்டிருந்தார். இதுகுறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக அவர் இருந்த ஐடிசி ஓட்டலிலேயே ஓபிஎஸ் அறை எடுத்தும் தங்கியுள்ளார். ஆனால் அவரை ஒருமுறை கூட அமித் ஷா ஏரெடுத்தும் பார்க்கவில்லையாம். இதனால் உச்சகட்ட ஏமாற்றத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சித் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் நடைமுறைகளில் இறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு மோடி... தமிழகத்துக்கு எடப்பாடி... அதிமுகவை துள்ளாட்டம் போடவைத்த அமித் ஷா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share