×
 

மருத்துவமனையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. ரகசிய சிகிச்சை என தகவல்?

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ராவல்பண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ரகசியமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ராவல்பண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ரகசியமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.



ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இதை எடுத்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி -  வாகா எல்லை மூடல் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதே போல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை அறிவித்தது. இதுதொடர்பான கூட்டங்களில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முதன்மை செயலாளர் ஆசாத் ரஹ்மான் கிலானி தெரிவித்துள்ளதாக கடிதம் வெளியாகி உள்ளது. அதுவும் ஏப்ரல் 27ஆம் தேதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கடித போக்குவரத்து சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.



பிரதமருக்கு மூலம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள ரகசிய தகவலில் குறிப்பிட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்தத் தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்டிப்புடன் ரகசியமாகப்  வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு இந்த உத்தரவு கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூல நோய் சிகிச்சைக்காக இவ்வளவு ரகசியம் ஏன் காக்கப்படுகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது. எல்லையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

இதையும் படிங்க: கெடு முடிந்தும் செல்லாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை.. அதிரடி முடிவுக்கு தயாராகும் அரசு?

இதையும் படிங்க: திமுகவில் பொன்முடி, செந்தில் பாலாஜி விக்கெட்டுகள் காலி.. இனி தொடர்ந்து விக்கெட்டுகள் விழும்.. ஹெச். ராஜா தாறுமாறு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share