கருப்பண்ணசாமி கோயில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கீடு.. மோதல் போக்கு உருவாகும் அபாயம்..
இந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்காக தாசில்தார் இடம் ஒதுக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா தீவட்டிப்பட்டி அருகே அய்யன் காட்டுவளவு பகுதியில் கருப்பனார் சாமுண்டீஸ்வரி கோவில் அமைந்துள்ளது. பொதுவாக காவல் தெய்வங்களாக இருக்கக்கூடிய இந்த கருப்பண்ண சுவாமி அய்யனார் சுவாமி போன்ற கோவில்கள் ஊர் எல்லையிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் கருப்பனார் சாமுண்டீஸ்வரி கோயில் அமைந்துள்ள பகுதியில் பக்தர்களில் அவ்வப்போது ஆடு கோழி என நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் காடையாம்பட்டி தாசில்தார் நாகூர் மீரான் ஐயன் காட்டுவளவு கருப்பனார் கோயிலின் ஒரு பகுதியில் சிறிய கரடு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 1.63 ஏக்கர் நலத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு நிலத்தை சமப்படுத்தி பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த இந்து முன்னணி அமைப்பினர் ஒன்று திரண்டு இது குறித்து தாசில்தாரிடம் கேட்டுள்ளனர். அப்போது இந்த பகுதி இஸ்லாமியர்களுக்கு தொழுகை செய்வதற்காக ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் போலீஸிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'திடீர்னு ஒரு ஆடு வந்து... அண்ணாமலையை செட் செய்த திமுக...? ஆதவ் சொன்ன அதிர்ச்சி- புருவம் உயர்த்திய விஜய்..!
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ஆண்டுக்கு இருமுறை மட்டும் இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்த, 15 அடிக்கு 15 என்று அளவில் சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக கருப்பனார் கோவில் வழிபாடு நடந்த இடத்தில் தற்போது தொழுகை நடத்த இடம் ஒதுக்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே மோதல் போக்கை வலுக்க கூடும் என்பதால் போலீசார் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் கட்சியிலும் சாதி பஞ்சாயத்து... தவெக மாவட்டப் பொறுப்பாளர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு..!