“விருப்பமில்லாமல் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம்...”- தன்னை நியாயப்படுத்தும் சீமான்..!
விருப்பமில்லாமல் ஒரு பெண்ணைக் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம். நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயத்தைக் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியாமல் அந்தப் பெண்ணை கூட்டி வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
விருப்பமில்லாமல் ஒரு பெண்ணைக் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம்.நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயத்தைக் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியாமல் அந்தப் பெண்ணை கூட்டி வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை பாலியல் வழக்கில் சம்மனுக்கு ஆஜராகாமல் சீமான் காவல்துறையினரிடம் தொடர்ந்து விளக்கம் மட்டுமே கொடுத்து வருகிறார். இதனிடையே நேற்று சீமான் வீட்டிற்கு சம்மன் ஒட்டச் சென்ற காவல்துறையினருக்கும், அவரது உதவியாளர் மற்றும் காவலாளி இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் விஜயலட்சுமி குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “என்ன பாலியல் வழக்கு, பாலியல் வழக்குன்னு சொல்லுறீங்க. ரெண்டு பக்கமும் சரியாக விசாரிக்க வேண்டும். என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுக்கட்டா கற்பழிச்சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. இதே சீமான் இயக்குநராக இருக்கிறேன். படம் எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கிறேன் என்றிருந்தால், இந்த வழக்கை இப்படி பேசுவீர்களா?. ஒட்டுமொத்த அதிகாரமும் என்னை சமாளிக்க முடியாததால், கருத்தியல் ரீதியாக மோத முடியாததால் ஒவ்வொரு முறையும், ஒரு பொம்பளையைக் கொண்டு வந்து நிறுத்துறீங்க என சிரித்துக் கொண்டே பதிலளித்தார். மகளிரணி நிர்வாகிகள் புடைசூழ ஊடகங்கள் முன்னிலையில் சீமான் இவ்வாறு பேசியிருப்பது பெரும் விமர்சனமாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்தது உண்மையா? - முதல் முறையாக உண்மையை பேசிய சீமான்...!
இதுகுறித்து சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்தால் தான் குற்றம். நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயம் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணை (விஜயலட்சுமி) கூட்டி வருவார்கள். இப்போது போனாலும் , அடுத்து சரியாக 2026 தேர்தலில் மீண்டும் கூட்டி வருவார்கள்.எங்கள் வீட்டில் நடந்த காவல்துறையின் நடவடிவக்கை அநாகரீகமானது எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கருணாநிதி மகனா.. பிரபாகரன் மகனா என பார்ப்போம்..! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் சவால்..!