பர்வேஷ், ரேகா குப்தா, சதீஷ்.. யார் அடுத்த டெல்லி முதல்வர்..?? நாளை மறுநாள் முடிவு
டெல்லி முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் நாளை மறுநாள் அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 61% வாக்குகள் பதிவாகி இருந்தன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி பாஜக 48 இடங்களிலும் ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும்வெற்றி பெற்றனர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி வாகை சூடியது. தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதாவின் வழக்கமான பாணியின்படி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பதை முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய முதல்வர் யார் என்று எதிர்பார்ப்பு நாடு முழுவதும் உள்ளது.
புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்மேஷ் வர்மாவின் பெயர் பிரதானமாக முதல்வர் பதவிக்கு அடிபட்டது. அத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் பெயரும் பேசப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி பெயரும் பரிசீலிக்கப்படுவதாக மற்றொரு தகவலும் வெளியாகி இருந்தது.
இதையும் படிங்க: பறிபோகிறது டெல்லி மேயர் பதவி.. ஆம் ஆத்மிக்கு அடுத்த அடி..!
முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான டெல்லியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று( திங்கள் கிழமை )நடைபெறுவதாக இருந்தது. பின்னர் இது நாளை மறுநாள், புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு விடும். இந்த கூட்டத்திற்கான பார்வையாளர்களை பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமை நியமனம் செய்து உள்ளது. தேர்வுக்கு பின் ஓரிரு நாட்களில் முதல்வர்பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
பர்வேஷ் வர்மா தவிர முதல்வர் பதவிக்கு சதீஷ் உபாத்தியாய் மற்றொரு வலுவான போட்டியாளர் ஆவார். டெல்லி பாஜக தலைவராக இவர் பணியாற்றியவர். டெல்லி இளைஞர் பிரிவின் தலைவர் பதவியையும் அவர் வகித்திருக்கிறார். மேலும் பெண் முதல்வராக ரேகா குப்தாவின் பெயரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய MLA களில் 31 கிரிமினல்கள்..! 17 பேர் மீது கொலை வழக்கு..! தலை சுற்றும் தலைநகர் அரசியல்