தாய்லாந்தில் புத்தாண்டுத் திருவிழா... பொதுமக்கள் பாதுகாப்புக்கு களமிறக்கப்பட்ட AI போலீஸ்!!
தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு அங்கு முதல்முறையாக AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் புத்தாண்டுத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சொங்க்ரான் எனப்படும் இந்த விழாவில் தாய்லாந்துக் காவல்துறை முதன்முறையாக AI இயந்திர போலீஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தி உள்ளது. நகோன் பதோம் மாநிலத்தில் இந்த AI போலீஸ் களமிறக்கப்பட்டுள்ளது. ஏஐ போலிஸ் சைபோர்க் 1.0 என்றும் குறிப்பிடப்படும் AI போலீஸ்-க்கு நகோன்பதோம் பிலாட் பாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முவாங் மாவட்டம், டான்சன் சாலையிலுள்ள சொங்க்ரான் அவென்யூவில் இந்த AI போலீஸ் பணியமர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த AI இயந்திர போலீஸ் 360 டிகிரியிலும் செயல்படவல்ல திறன்மிகுந்தது. இதில் AI படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலக் காவல்துறை வட்டாரம் 7, நகோன் பதோம் மாநிலக் காவல்துறை, நகோன் பதோம் மாநகராட்சி ஆகியவை இணைந்து இந்த AI போலீஸ் அதிகாரியை உருவாக்கியுள்ளன. இந்த AI போலீஸ், விழா நடக்கும் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவிகள் மூலம் பெறப்படும் நேரடிக் காணொளிகளையும் ஆளில்லா வானூர்திக் கண்காணிப்புக் காணொளிகளையும் சைபோர்க் ஒருங்கிணைக்கும்.
இதையும் படிங்க: BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மாநாடு உதவும் - மோடி..!
பின்னர் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை அது செயல்முறைக்கு உள்ளாக்கும் என கூறப்படுகிறது. சைபோர்க்கின் படக்கருவிகளே காணொளிகளை ஆய்வு செய்யும் செயல்திறனுடன் இயங்கவல்லவை. பொதுமக்களின் பாதுகாப்பைத் திறம்படக் கையாள ஏதுவாக அவை காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தேடப்பட்டு வரும் அல்லது அபாயமிக்க மனிதர்களை சைபோர்க் அடையாளம் கண்டு, அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் திறன்கொண்டது. முகத்தோற்றம், ஆடை, உடல்வாகு, பாலினம் ஆகியவற்றின் மூலம் தனிமனிதர்கள் தேடப்பட்டு, அடையாளம் காணப்படுவர். மேலும் திருவிழாவின் போது சந்தேகத்திற்கிடமான நபர்களை பின்தொடர்ந்து, அவர்கள் சண்டையிடுதல் அல்லது தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களில் அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்களா என்பதை இந்த சைபோர்க் கண்காணிக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தாய்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பாரத் மாதா கி ஜே என முழக்கம்..!