×
 

அமெரிக்க டாலரை ஓரம்கட்ட நினைத்தால்? பிரிக்ஸ் அமைப்புக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்...

அமெரிக்க டாலரை ஓரம்கட்ட நினைத்தால் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்புக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப நேற்று 2வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவர் பதவி ஏற்றதும் நிர்வாக ரீதியாக பல்வேறு உத்தரவுகளை நேற்று பிறப்பித்தார். குறிப்பாக பிறப்புக்குடியுரிமையை ரத்து செய்வது, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது உள்ளிட்ட முடிவுகளை எடுத்தார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கே முக்கியத்துவம்… அமெரிக்க வெளியுறவு செயலாளர் பதவி ஏற்ற பின் ஜெய் சங்கருடன் முதல் சந்திப்பு..!


அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தனித்து செயல்பட முடிவு செய்தால், அமெரிக்க கரன்சியான டாலரில் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்த்துவிட்டு, கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையிலான கரன்சியில் பரிவர்த்தனை செய்து டாலரை ஒதுக்கினால், அமெரிக்காவுடன் இந்த நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபடும்போது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்.


இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளிடம் இருந்து எங்களுக்கு உத்தரவாதம் தேவை, இந்த புதிதாக பிரிக்ஸ் நாடுகள் மட்டும் பயன்படுத்தும் கரன்சியை உருவாக்கவும் கூடாது, டாலரை ஒதுக்கிவிட்டு வேறு எந்த நாட்டு கரன்சியையும் புழக்கத்தில் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், 100 சதவீதம் வரியும், அமெரிக்காவுக்குள் பிரிக்ஸ் நாடுகள் தங்களின் எந்த உற்பத்திப் பொருட்களையும் விற்க முடியாமல் போகும்” என மிரட்டல் விடுத்தார்.


கடந்த டிசம்பர் மாதமும் இதேபோன்ற எச்சரிக்கையை டொனால்ட் ட்ரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு விடுத்திருந்தநிலையில் நேற்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு பேட்டியில் கூறுகையில் “ அமெரிக்க டாலரை ஒதுக்கியோ அல்லது பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து புதிய கரன்சியை உருவாக்கும் எண்ணமெ எங்களுக்கு இல்லை” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: பிறப்புக் குடியுரிமை ரத்து: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை எந்த வகையில் பாதிக்கும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share