×
 

அமெரிக்கவாழ் இந்தியர்களை அச்சுறுத்தும் பிப்ரவரி 20... குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி...

அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்ற டோனல்ட் ட்ரம்ப், தான் பதவியேற்ற முதல்நாளில் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தடதடப்பு இந்தநொடி அடங்கவில்லை.

அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் அறிவித்தவற்றுள் இந்தியர்களை பாதித்த முக்கியமான அறிவிப்பு என்னவெனில், பிறப்பால் இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது என்பதாகும். அதாவது அமெரிக்கர்கள் அல்லாத வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி, பணிபுரிந்து வரும்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அந்நாட்டு சட்டத்தின்படி இயல்பாக அமெரிக்க குடியுரிமை கிடைத்து வந்தது. இனி அவ்வாறு கொடுக்க முடியாது என்பதுதான் ட்ரம்ப் போட்ட உத்தரவாகும். அதேபோன்று க்ரீன்கார்டு இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்க குடியுரிமை கிடைத்து வந்தது. இப்போது ட்ரம்பின் உத்தரவு அதற்கும் தடைபோட்டுள்ளது. 

இதையும் படிங்க: ட்ரம்ப் அரசுக்கு பணிகிறதா மோடி அரசு? 18 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகளை தாயகம் அழைத்துவர மத்திய அரசு திட்டம்...

அமெரிக்காவில் செட்டிலாகி விட வேண்டும், க்ரீன்கார்டு வாங்கி விட வேண்டும் என்பது அந்நாட்டுக்கு செல்லும் இந்தியர்கள் பெரும்பாலானோரின் கனவு. அந்த கனவில் தான் மண்ணை அள்ளி போட்டிருக்கிறார் ட்ரம்ப். பிப்ரவரி 20-ந் தேதி என்பது ட்ரம்ப் விதித்த குடியுரிமை காலக்கெடுவாகும். அந்த தேதிக்குப் பின்னர் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க இயலாது.

எனவே அமெரிக்காவில் தற்போது கருவுற்று இருக்கும் இந்திய பெண்கள் மற்றும் வெளிநாட்டு பெண்கள் பலரும் மருத்துவர்களை தேடி ஓடி செல்கின்றனராம். அதாவது குறைபிரசவமாக இருந்தாலும் பரவாயில்லை, வயிற்றில் உள்ள சிசு, 8 மாதமோ, 7 மாதமோ பிப்ரவரி 20-ந் தேதிக்குள் பிரசவம் பார்த்து விடுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனராம். அதாவது பிப்ரவரி 20-ந் தேதிக்குள் குழந்தை பெற்றுக் கொண்டால் பழைய சட்டத்தின்படி இயல்பாக அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடும். அதன்பின்னர் பிறக்கும் குழந்தை அந்தந்த நாட்டு தூதரகங்களை அணுகி தகவலை பகிர்ந்து பாஸ்போர்ட் பெற்று அமெரிக்காவில் வாழநேரிடும்.  இதேபோன்று பிப்ரவரி 20-ந் தேதிக்குள் க்ரீன்கார்டு பெறவும் இந்தியர்கள் முண்டியடித்து வருகின்றனர். இதனால் அத்தகைய அலுவலகங்களும் பொதுமக்களால் நிரம்பி வழிகிறது. 

அமெரிக்காவில் தற்போது 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். படிப்புக்காக, வேலைக்காக என சென்றவர்களும் நிரந்தரமாக தங்கி விட்டவர்களும் சேர்த்து இந்த எண்ணிக்கை உள்ளது. இதில் ஏறத்தாழ 20 லட்சம் பேர் அமெரிக்காவில் பிறந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள். எஞ்சியவர்களின் நிலைமை தான் தற்போது சிக்கலாகி உள்ளது. 

ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 22 மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிபரின் உத்தரவுக்கு நீதிமன்றம் கடிவாளம் போடுமா என்பது தெரியவில்லை. 

இதையும் படிங்க: பிறப்புக் குடியுரிமை ரத்து: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை எந்த வகையில் பாதிக்கும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share