×
 

ஹார்வார்ட் பல்கலை.க்கு 230 கோடி டாலர் உதவி நிறுத்தம்.. கோரிக்கையை ஏற்காததால் அதிபர் ட்ரம்ப் ஆத்திரம்..!

அதிபர் ட்ரம்ப் அரசு விதித்த கோரிக்கைகளை ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஏற்க மறுத்தததைத் தொடர்ந்து அதற்கு வழங்கப்பட்டு வந்த 230 கோடி டாலர் நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது ட்ரம்ப் அரசு.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசின் கல்வித்துறை அமைச்சகம் 230 கோடி டாலர் உதவியை ஹார்வார்ட் பல்கலைக்கழக்துக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த பல்கலைக்கழகத்துக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் ஆட்சி செய்யும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, ஏராளமான கோரிக்கைகளுடன் எங்களை அனுகியது. அதில் குறிப்பாக பல்கலைக்கழக வளாகத்தில் யூதர்களுக்கு எதிரான பிரசாரத்தை தடை செய்ய வேண்டும் என்பதாகும். கோரிக்கைகளை ஏற்காவிட்டால் 900 கோடி டாலர் உதவியை நிறுத்துவோம் எனத் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: யார் இந்த ஸ்டீபன் மிரன்..? அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பின் சூத்திரதாரி பொருளாதார வல்லுநர்..?

உண்மையில் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம். இங்கு பயிலும் மாணவர்கள் மெரிட்டில் தேர்ச்சி பெற்று பயில்கிறர்கள். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெளிவான விதிகளை வெளிப்படையாக அறிவித்து அதன்படி செயல்படுகிறோம். இங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் பேராசிரியர்கள்,  ஊழியர்கள் அனைவருக்கும் மதர்சார்பற்ற தன்மையோடு இருக்கிறார்கள். 

மாணவர்கள் முகக்கவசம் அணியக்கூடாது, யூதர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தல், ஒன்றுகூடுதலில் ஈடுபடக்கூடாது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசக்கூடாது, பல்கலைக்கழக கட்டிடங்களில் போராட்டம் செய்யும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், மாணவர்கள் நிதி திரட்டுதல், குழுவாகச் சேர்தல், கிரிமினல் செயல்களை தூண்டுதல், சட்டவிரோத செயல்கள், வன்முறை ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியது.

ஆனால், நாங்கள் இந்த கோரிக்கைக்கு ஏற்கவில்லை. இதனால் பல்கலைக்கழகத்துக்கான 230 கோடி டாலர் நிதியையும், 6 கோடி டாலர் ஒப்பந்தத்தையும் நிறுத்திவைத்துள்ளது அதிபர் ட்ரம்ப் அரசு “ எனத் தெரிவித்துள்ளது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர், ஹார்வார்ட் மாணவர்களுக்கு எழுதிய கடிதத்தில் “அமெரிக்க அரசின் கோரிக்கைகள், பல்கலைக்கழகத்தின் உரிமையை பறிப்பது போலாகும். அரசின் உரிமைகள், அதிகாரிகளுக்கு வரையரை இருக்கிறது. மாணவர்களுக்கு எதிராக இனம், மொழி, நிறம், பூர்வீகம் ஆகியவற்றுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, எந்த அரசாங்கமும் தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்கலாம், யாரை சேர்க்கலாம், பணியமர்த்தலாம், எந்தெந்த படிப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகளைத் தொடரலாம் என்பதை ஆணையிடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிர்ப்பு.. வலுக்கும் மக்கள் போராட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share