×
 

கொரோனா லாக்டவுனை எதிர்த்தவர்..! அமெரிக்க சுகாதாரத்துறை தலைவராக இந்தியர் ஜெய் பட்டாச்சார்யா நியமனம்..!

அமெரிக்காவின் சுகாதாரத்துறை தலைவராக இந்தியர் ஜெய் பட்டாச்சார்யாவை நியமித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டான்போர்ட் சுகாதாரத்துறை பொருளாதார வல்லுநரான ஜெய் பட்டாச்சார்யா கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாக்டவுன் தேவையில்லை என்று கடுமையாக வாதிட்டு கருத்துக்களை பதிவு செய்தார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ஜெய் பட்டாச்சார்யா. அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். அங்குள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் எக்னாமிஸ்ட் துறையில் பேராசிரியாக பணியாற்றி வந்தார்.

2020ம் ஆண்டு உலகில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாக்டவுன் முறையை செயல்படுத்துவதற்கு பட்டாச்சார்யா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். மாறாக மக்களுக்கு “ஹேர்ட் இம்யூனிட்டி” எனப்படும் மந்தை எதிர்ப்புசக்தி வந்துவிடும், உடல்நலனில் பலவீனமானவர்களை இவர்கள் பாதுகாப்பார்கள் என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தை பட்டாச்சார்யா கொண்டு வந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களின் கையொப்பத்தைப் பெற்று அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அது மட்டுமல்லாமல் லாக்டவுன் நீண்டகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும், குறிப்பாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தும், மனநிலையை பாதிக்கும், புற்றுநோய் சிகிச்சையை பாதிக்கும் என எச்சரித்தார்.

இதையும் படிங்க: நாங்க எதுக்கும் ரெடி..! அமெரிக்கா போரை விரும்பினால் வரலாம்... அதிபர் ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த சீனா..!

ஆனால், பட்டாச்சார்யாவின் ஆலோசனைக்கு பல அறிவியல் வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர், அவரின் கடிதத்தையும் கண்டித்தனர். 2022ம் ஆண்டு எலான் மஸ்கை சந்தித்த  பட்சார்யா கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொடுத்த ஆலோசனைகளை அரசிடம் கொண்டு செல்லாமலே தடுத்துவிட்டனர் என்று ஆதங்கம் தெரிவித்தார். இதையடுத்து, பட்டாச்சார்யாவின் ஆவணங்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் எலான் மஸ்க் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது, அப்போது இருந்த ஜோ பிடன் அரசாங்கம் எக்ஸ் தளத்தை முடக்கவும் திட்டமிட்டது.

அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே பல்கலைக்கழகங்களுக்கான மானியத்தை 400 கோடி டாலர் குறைத்து வேறுதிட்டங்களுக்கு திருப்பிவிட்டார். எலான் மஸ்க், அரசு ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார். இந்நிலையில் அமெரிக்காவின் 4800 கோடி டாலர் பட்ஜெட்டை பட்டாச்சார்யா கண்காணிக்க உள்ளார். தேசிய சுகாதாரத்துறை செயலர் ராபர்ட் எப் கென்னடி யுடன் சேர்ந்து பணியை பட்டாச்சார்யா தொடங்க உள்ளார்.
பட்டாச்சார்யா ஒரு சுகாதாரத்துறை பொருளாதார வல்லுநரேத் தவிர முறையாக மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. சுகாதாரப் பொருளாதாரம், சுகாதாரக் கொள்கைகளை வடிவமைக்கும் பொருளாதார வல்லுநராக இருக்கிறாரேத் தவிர மருத்துவர் இல்லை என்று என்ஐஹெச் முன்னாள் இயக்குநர் ஜெர்மி பெர்க் தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதாரத்துறை தலைவரா பட்டாச்சார்யா நியமிக்கப்பட்ட முடிவை செனட் அவையில் இருக்கும் குடியரசுக் கட்சி எம்.பிக்கள் வரவேற்று புகழாரம் சூட்டுகிறார்கள். பட்டாச்சார்யா தலைமையில் என்ஐஎச் அமைப்பு புதிய பரிமாணத்தை எட்டும், பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை நடத்தும் என நம்புகிறார்கள். ஆனால் செனட் அவையில் ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் 53 பேரும், குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் 47 என சிறுபான்மையாக இருக்கிறார்கள். இதனால் பட்டாச்சார்யா நியமனத்துக்கு வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் கிடைத்தபின் அதிகாரபூர்வமாக அவர் பதவி ஏற்பார்.
 

இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப்புக்குள் ‘ஈரம்’..! 13 வயது சிறுவன் அமெரிக்காவின் ‘சீக்ரெட் சர்வீஸ்’ இயக்குநராக நியமனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share